பாடல் #8024
நேற்றும் இன்றும் என்றும்
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
1. நேற்றும் இன்றும் என்றும் மாறாதேவா ஸ்தோத்திரம் நேசம் பாசம் அன்பில் மாறாதேவா ஸ்தோத்திரம் அற்புதமானவர் அதிசயமானவர் செயல்களிலே மிக மகத்துவமானவரே... ஸ்தோத்திரிப்போம் நாம் ஸ்தோத்திப்போம் துதிபாத்திரரை நாம் ஸ்தோத்திப்போம் ஸ்தோத்திர பலிகளை உதடினிலே - சொல்லி ஊக்கமாக நாம் ஸ்தோத்தரிப்போம் 2. அகில உலகை ஆண்டுகொண்ட ராஜா ஸ்தோத்திரம் ஆயிரமாயிரம் சேனையளுடைய ராஜா ஸ்தோத்திரம் உன்னதமானவர் உலகில் உயர்ந்தவர் யுத்தத்திலே மிக வல்லமையுள்ளவரே... ஆர்ப்பரிப்போம் நாம் ஆர்ப்பரிப்போம் மிகப்பெரியவரை நாம் ஆர்ப்பரிப்போம் உலகில் உள்ள சாத்தானை - ஜெயங் கொண்டவரை நாம் ஆர்ப்பரிப்போம் 3. இன்றும் என்றும் ஜீவிக்கின்ற உயிரே ஸ்தோத்திரம் இருக்கின்றவராய் இருக்கின்றவரே உமக்கேஸ்தோத்திரம் சாவை வென்றவர் சர்வ வல்லவர் சகலமும் செய்ய வல்லமையுள்ளவரே... துதித்திடுவோம் நாம் துதித்திடுவோம் உயிருள்ளவரை நாம் துதித்திடுவோம் உலகின் முடிவு பரியந்தம் - நம் உடனுள்ளவரை துதித்திடுவோம்