பாடல் #8019
ஆவியோடும் உண்மையோடும்
🔤 Aaviyaeாtum Unmaiyaeாtum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியோடும் உண்மையோடும் ஆண்டவரை தொழுதிடுவோம் பரிசுத்த அலங்காரத்துடனே நாமும் பரிசுத்தரை தொழுவோமே 1. நடுக்கத்தோடும் பயபக்தியோடும் கர்த்தரில் களிகூறுவோம் பனிந்து குனிந்து தலைகள் தாழ்த்தி பாதம் பணிந்திடுவோம் - அவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரிசுத்தரிடம் பாவமில்லையே - அவர் பரிசுத்தம் எல்லையில்லையே 2. ஆர்வத்தோடும் ஆனந்தத்தோடும் சந்நிதி வாருங்களே கர்த்தரே தேவன் மகாராஜன் என்றே சொல்லுங்களே-அவர் வாசலில் துதியோடும் புகழ்ச்சியோடும் வந்து கீர்த்தனம் பண்ணுங்களே -துதி பலிகளை செலுத்துங்களே 3. உதட்டிலல்ல உள்ளத்திலிருந்து ஸ்தோத்திர பலியிடுவோம் ஒன்று கூடி ஒருமனமாய் பாடி புகழ்ந்திடுவோம்-அவரே தேவன் நாம் அவர் ஆடுகளே அவர் சத்தியம் மேய்ந்திடுவோம்-அதில் என்றென்றும் நிலைத்திருப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaeாtum Unmaiyaeாtum Aandavarai Theாzhuthituvaeாm Parisuttha Alangkaaratthudanae Naamum Parisuttharai Theாzhuvaeாmae 1. Natukkatthaeாtum Payapakthiyaeாtum Karttharil Kalikooruvaeாm Paninthu Kuninthu Thalaigal Thaazhtthi Paadham Paninthituvaeாm - Avar Parisutthar Parisutthar Parisuttharae Parisuttharidam Paavamillaiyae - Avar Parisuttham Ellaiyillaiyae 2. Aarvatthaeாtum Aanandhatthaeாtum Sannithi Vaarunggalae Karttharae Devan Makaaraajan Enrae Seாllunggalae-avar Vaasalil Thuthiyaeாtum Pugazhchsiyaeாtum Vanthu Keertthanam Pannunggalae -thuthi Paligalai Selutthunggalae 3. Udhattilalla Ullatthilirunthu Sthaeாtthira Paliyituvaeாm Onru Kooti Orumanamaay Paati Pugazhnthituvaeாm-avarae Devan Naam Avar Aatugalae Avar Satthiyam Maeynthituvaeாm-athil Enrenrum Nilaitthiruppaeாm