பாடல் #8012
வரதட்சணை கேட்டு
🎙 Bro. அகத்தியன் • 💿 தியான பாடல்கள்
வரதட்சணை கேட்டு கொடுமை செய்யாதே நண்பா பண ஆசை எல்லா தீங்குக்கும் காரணமாய் இருக்கின்றது குடும்பத்துக்கொரு பாரமாக தான் இருப்பது போல எண்ணி கண்ணீரோடு காலம் தள்ளும் பெண்களை நினைக்க வேண்டும் மாப்பிள்ளையின் வீட்டார் கேட்ட பணம் இல்லை என்பதாலே பெண்ணைப் பெற்ற தந்தையும் தாயும் கண்ணீர் வடிக்கின்றாரே நான் கேட்க மாட்டேன் ஆனால் அப்பாதான் கேட்கிறாரு என்று சாக்குபோக்கு சொல்லி நழுவி விடாதே பிரதரே பாவப்பட்ட மாமனாரின் வயிற்றில் அடிக்கவேண்டாம் பிரதரே பாவப்பட்ட மாமியாரின் வயிற்றில் அடிக்கவேண்டாம் பிரதரே விக்கிரக ஆராதனையாம் பண ஆசை நமக்கு வேண்டாம் உன்னை விட்டு விலகுவதில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்று சொன்ன இயேசுவை நம்பி தைரியமாய் திருமணம் பண்ணு கேயாசியை நினைத்து பாரு யூதாசை நினைத்து பாரு பண ஆசை இருந்ததாலே இருவரும் அழிந்து போனார்