பாடல் #801
இயேசு நான் நிற்கும்
🔤 Yesu Naan Nirkum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நான் நிற்குங் கன்மலையே! - மற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே. 1.இயேசுவின் நாமத்தின் மேலே - என்றன் எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே; நேசனையுங் கூட நம்பேன், - நான் இயேசு நாமத்தின் மேல் முழுதுமே சார்வேன். - இயேசு 2.இருள் அவர் அருள் முகம் மறைக்க, - நான் உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன்; உரமாகக் கடும்புயல் வீச, - சற்றும் உலையாத எனது நங்கூரமாம் அவரே. - இயேசு 3.பெரு வெள்ளம், பிரவாகம் வரினும் - அவர் பிரிதிக்னை, ஆணை, இரத்தம் என் காவல்; இருதயத்தின் நிலை அசைய - அப்போ தேசுவே என் முழு நம்பிக்கையாமே. - இயேசு 4.சோதியாய் அவர் வரும்போது - நான் சுத்தனாய்த் தரிசித்தே அவரைப் போலாவேன்; நீதியாம் ஆடை தரிப்பேன், - சதா நித்திய காலமாய் ஆளுகை செய்வேன். - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Naan Nirkung Kanmalaiyae! - Martra Endha Aathaaramum Verum Manal Tharaiyae. 1.yesuvin Naamatthin Maelae - Endran Ellaa Nampikkaiyum Vaitthaen Anpaalae; Naesanaiyung Kooda Nampaen, - Naan Yesu Naamatthin Mael Muzhuthumae Saarvaen. - Yesu 2.irul Avar Arul Mugam Maraikka, - Naan Uruthiyaay Avar Maaraak Kirupaiyil Nilaippaen; Uramaagak Katumpuyal Veesa, - Sarrum Ulaiyaadha Enathu Nangkooramaam Avarae. - Yesu 3.peru Vellam, Piravaagam Varinum - Avar Pirithiknai, Aanai, Rattham En Kaaval; Irudhayatthin Nilai Asaiya - Appo Thaesuvae En Muzhu Nampikkaiyaamae. - Yesu 4.sothiyaay Avar Varumpothu - Naan Sutthanaayth Tharisitthae Avaraip Polaavaen; Neethiyaam Aatai Tharippaen, - Sathaa Nitthiya Kaalamaay Aalukai Seyvaen. - Yesu