பாடல் #8004
கண்ணா சுத்த கண்ணா
🔤 Kannaa Suttha Kannaa
🎙 Bro. அகத்தியன் • 💿 தியான பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணா சுத்த கண்ணா தீமையை பார்க்காத சுத்த கண்ணா தீமை செய்த மனிதனுக்கு நன்மை செய்த கண்ணா பாவியை அணைக்கின்ற கருணைக் கண்ணா கண்ணா இயேசு இராஜா என்னிடம் பாவம் உண்டு என்று யார் என்னை குறைகூற முடியும் என்றீர் குறையேதுமில்லாத அவதாரமே நிஷ்களங்க புருஷப் பிரஜாபதியே குற்றமே இல்லாத நிர்மல நாதா கண்ணா பாவமின்றி நீர் வாழ்ந்தது போல மனிதர்களை பாவமின்றி வாழச் சொன்னீர் சொல்லாலும் செயலாலும் சிந்தனையினாலும் முன்மாதிரியாய் வாழ்ந்த வழிகாட்டியே மனிதன் எப்படி வாழவேண்டும் என்று கற்றுத் தந்த அன்பு அண்ணா ஜாதி வெறியை ஒழிக்க வந்த சமத்துவ கண்ணா ஒற்றுமை உருவாக்க வந்த சமாதானக் கண்ணா நாக தோஷம், சனி தோஷம், செவ்வாய் தோஷம் என்று பயந்து பயந்து வாழ்வோருக்கு விடுதலை தரும் கண்ணா, தோஷம் நீங்கி நாங்கள் வாழ சிலுவையிலே உயிரைத் தந்த கண்ணா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kannaa Suttha Kannaa Theemaiyai Paarkkaadha Suttha Kannaa Theemai Seytha Manidhanukku Nanmai Seytha Kannaa Paaviyai Anaikkindra Karunaik Kannaa Kannaa Yesu Iraajaa Ennidam Paavam Untu Enru Yaar Ennai Kuraikoora Mutiyum Enreer Kuraiyaethumillaadha Avathaaramae Nishkalangga Purushap Pirajaabathiyae Kurtramae Illaadha Nirmala Naathaa Kannaa Paavaminri Neer Vaazhndhathu Pola Manidharkalai Paavaminri Vaazhach Sonneer Sollaalum Seyalaalum Sindhanaiyinaalum Munmaathiriyaay Vaazhndha Vazhikaattiyae Manidhan Eppati Vaazhavaentum Enru Karruth Thandha Anpu Annaa Jaathi Veriyai Ozhikka Vandha Samatthuva Kannaa Orrumai Uruvaakka Vandha Samaathaanak Kannaa Naaga Thosham, Sani Thosham, Sevvaay Thosham Enru Payanthu Payanthu Vaazhvorukku Vitudhalai Tharum Kannaa, Thosham Neengki Naanggal Vaazha Siluvaiyilae Uyiraith Thandha Kannaa.