பாடல் #8002
ஒருவன் இயேசுவில் அன்பாயிருந்தால்
🔤 Oruvan Yesuvil Anpaayirunthaal
🎙 Bro. அகத்தியன் • 💿 தியான பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருவன் இயேசுவில் அன்பாயிருந்தால் இயேசுவின் வார்த்தைகளை கைக்கொள்கிறான் இயேசுவில் அன்பாயிராதவன் இயேசுவின் போதனையை புறக்கணிக்கிறான் உயிருள்ள வார்த்தைகளை புறக்கணிக்கிறான் இறைவனால் உண்டானவன் இறைவனின் வார்த்தைக்கு அர்த்தமுள்ள போதனைக்கு அன்பின் அறிவுரைக்கு செவிசாய்க்கிறான் சத்தியத்தை அறிந்தவன் விடுதலை அடைகிறான் உண்மையை உணர்ந்தவன் துணிவோடு வாழ்கிறான் வேதமில்லையேல் வெற்றியில்லையே இயேசுவின் போதனை தான் மோட்சம் செல்லும் பாதையாம் தெய்வத்தின் வார்த்தையை மீறுகின்ற பரம்பரை நம்பிக்கைகள் மூட மரபுகளை இயேசு கிறிஸ்து வெறுக்கின்றாரே கடவுளின் மனதினை புரிந்திடுவோம் கடவுளின் விருப்பம் செய்திடுவோம் கடவுளை தள்ளி அவர் வார்த்தையை மறுத்தால் அந்த வார்த்தையையே நாம்மை நியாயம் தீர்க்கும் மனிதனின் வார்த்தைக்கு கீழ்படிவதைவிட கடவுளின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து கீழ்ப்படிந்து நடக்க கடவுள் சொன்னாரே திருச்சபை போதகர் சொல்லித் தந்ததை மறைநூல் வாசித்து ஆராய்வோம் உண்மையை உணருவோம் அறிந்தபின் திருந்துவோம் உண்மை ஒருநாள் ஜெயிப்பது நிச்சயம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oruvan Yesuvil Anpaayirunthaal Yesuvin Vaartthaigalai Kaikkolkiraan Yesuvil Anpaayiraadhavan Yesuvin Podhanaiyai Purakkanikkiraan Uyirulla Vaartthaigalai Purakkanikkiraan Iraivanaal Untaanavan Iraivanin Vaartthaikku Artthamulla Podhanaikku Anpin Arivuraikku Sevisaaykkiraan Satthiyatthai Arindhavan Vitudhalai Ataikiraan Unmaiyai Unarndhavan Thunivotu Vaazhkiraan Vaedhamillaiyael Verriyillaiyae Yesuvin Podhanai Thaan Motsam Sellum Paathaiyaam Theyvatthin Vaartthaiyai Meerukindra Parambarai Nampikkaigal Mooda Marapugalai Yesu Kiristhu Verukkinraarae Katavulin Manathinai Purinthituvom Katavulin Viruppam Seythituvom Katavulai Thalli Avar Vaartthaiyai Marutthaal Andha Vaartthaiyaiyae Naammai Niyaayam Theerkkum Manidhanin Vaartthaikku Keezhpativathaivida Katavulin Vaartthaikku Mukkiyatthuvam Kotutthu Keezhppatinthu Natakka Katavul Sonnaarae Thirucchapai Podhakar Sollith Thandhathai Marainool Vaasitthu Aaraayvom Unmaiyai Unaruvom Arindhapin Thirunthuvom Unmai Orunaal Jeyippathu Nicchayam