பாடல் #7977
என் நெஞ்சமே
🔤 En Nenjjamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் நெஞ்சமே , நீ மோட்சத்தை விரும்பித் தேடி, கர்த்தரை வணக்கத்துடனே துதித்துப் பாடி, என்றைக்கும் புகழ்ந்து போற்று நித்தமும் மகிழ்ச்சியாகவே. 2. நட்சத்திரங்கள், சந்திரன், வெம் காந்தி வீசும் சூரியன், ஆகாச சேனைகள், மின், மேகம், காற்று மாரியே , வானங்களின் வானங்களே, ஒன்றாகப் பாடுங்கள். 3. விஸ்தாரமான பூமியே, நீயும் எழுந்து வாழ்த்தல் செய், யேகோவா நல்லவர் . சராசரங்கள் அனைத்தும், அவர் சொற்படி நடக்கும்; அவரே ஆண்டவர். 4. பரத்திலுள்ள சேனையே, புவியிலுள்ள மாந்தரே, வணங்க வாருங்கள். யேகோவா தாம் தயாபரர், எல்லாவற்றிற்கும் காரணர்; அவரைப் போற்றுங்கள். ஆமேன் .
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Nenjjamae , Nee Motsatthai Virumpith Thaeti, Karttharai Vanakkatthudanae Thuthitthup Paati, Enraikkum Pugazhnthu Porru Nitthamum Makizhchsiyaagavae. 2. Natsatthiranggal, Santhiran, Vem Kaanthi Veesum Sooriyan, Aakaasa Saenaigal, Min, Maegam, Kaarru Maariyae , Vaananggalin Vaananggalae, Onraagap Paatunggal. 3. Visthaaramaana Poomiyae, Neeyum Ezhunthu Vaazhtthal Sey, Yaekovaa Nallavar . Saraasaranggal Anaitthum, Avar Sorpati Natakkum; Avarae Aandavar. 4. Paratthilulla Saenaiyae, Puviyilulla Maandharae, Vanangga Vaarunggal. Yaekovaa Thaam Thayaabarar, Ellaavarrirkum Kaaranar; Avaraip Porrunggal. Aamaen .