பாடல் #7976
தந்தாய் உம்மைத்
🔤 Thanthaay Ummaith
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தந்தாய் உம்மைத் துதித்தே உந்தன் நாமம் போற்றுவோமே; அற்பர் பாவம் யாவுமே தற்பரா நீர் மன்னிப்பீரே; தூதரோடும் வேந்தே உம் பாதம் வீழ்ந்தே சேவிப்போம். 2. வான சேனையாருமே மோன தூய பக்தரோடும் கேரூப் சேராப் கோஷ்டிகள் சேரும் உந்தன் நாமம் போற்ற; தூய தூயரே, உம்முன் தாழ்ந்து வீழ்ந்து பாடுவார். 3. தூய வானோர் போற்றிடும் தூய தூய தூய கர்த்தா , மாந்தர் யாரும் பாடிடும் வேந்தர், மீட்பர், உம் தயாளம் அன்பு யார்க்கும் ஈவதால் நன்றியோடு ஏற்றுவோம் . 4. உந்தன் சமாதானமே எந்தத் தேசம் தன்னில் ஊன்ற யுத்தம் பகை ஓய்ந்திட அத்தன் அன்பால் மாந்தர் கூட; வீழ்வார் உந்தன் பாதமே தாழ்வார் உந்தன் நாமத்தில். 5. தந்தை சுதன் ஆவிக்கே எந்த நாளும் மேன்மை ஸ்துதி ; ஆதரிக்கும் மூர்த்தியே, பாதம் வீழ்ந்து சர் நாங்கள். அன்பா! உந்தன் மா அன்பை என்றும் என்றும் ரூபிப்போம் . ஆமேன் .
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thanthaay Ummaith Thuthitthae Undhan Naamam Porruvomae; Arpar Paavam Yaavumae Tharparaa Neer Mannippeerae; Thoodharotum Vaenthae Um Paadham Veezhnthae Saevippom. 2. Vaana Saenaiyaarumae Mona Thooya Paktharotum Kaeroop Saeraap Koshtigal Saerum Undhan Naamam Portra; Thooya Thooyarae, Ummun Thaazhnthu Veezhnthu Paatuvaar. 3. Thooya Vaanor Porritum Thooya Thooya Thooya Kartthaa , Maandhar Yaarum Paatitum Vaendhar, Meetpar, Um Thayaalam Anpu Yaarkkum Eevathaal Nanriyotu Aerruvom . 4. Undhan Samaathaanamae Endhath Thaesam Thannil Oondra Yuttham Pakai Oynthida Atthan Anpaal Maandhar Kooda; Veezhvaar Undhan Paadhamae Thaazhvaar Undhan Naamatthil. 5. Thanthai Sudhan Aavikkae Endha Naalum Maenmai Sthuthi ; Aadharikkum Moortthiyae, Paadham Veezhnthu Sar Naanggal. Anpaa! Undhan Maa Anpai Enrum Enrum Roopippom . Aamaen .