பாடல் #7973
உன்னதரே நீர் மகிமை
🔤 Unnatharae Neer Makimai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. உன்னதரே நீர் மகிமை , இந்நிலம் சமாதானத்தை அடைய அன்பு ஒங்க ! பராபரனார் கர்த்தாவே , பரம ராஜர் பர்த்தாவே வல்லமை தந்தாய் வாழ்க ! தாழ்ந்து வீழ்ந்து , போற்றுவோமே புகழ்வோமே தொழுவோமே ; மாட்சிமைக்கென்றும் ஸ்தோத்ரம். 2. பிதாவின் ஒரே மைந்தனே , சுதாவே கர்த்தர் ராஜரே , தெய்வாட்டுக்குட்டி நீரே ; பார் மாந்தர் பாவம் போக்கிடும் , மா தந்தை பக்கல் ஆண்டிடும் மகத்துவ கிறிஸ்து நீரே; கேட்பீர் ஏற்பீர் ஏழை நீசர் எங்கள் ஜெபம் தாழ் வாம் வேண்டல் ; இரங்குவீர் தயவோடே . 3. நீர் தூயர் தூயர் தூயரே , நீர் கர்த்தர் கர்த்தர் கர்த்தரே, என்றென்றும் ஆள்வீர் நீரே; பிதாவின் ஆசனத்திலே மேதையாய் வீற்றுப் பாங்கினில் கர்த்தாவாம் ஆவியோடே , இன்றும் என்றும் ஏக மாண்பு ஏக மாட்சி ஏக மேன்மை தாங்கி ஆள்வீர் தேவரீரே . ஆமேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Unnatharae Neer Makimai , Innilam Samaathaanatthai Ataiya Anpu Ongga ! Paraabaranaar Kartthaavae , Parama Raajar Partthaavae Vallamai Thanthaay Vaazhka ! Thaazhnthu Veezhnthu , Porruvomae Pugazhvomae Thozhuvomae ; Maatsimaikkenrum Sthothram. 2. Pithaavin Orae Maindhanae , Suthaavae Kartthar Raajarae , Theyvaattukkutti Neerae ; Paar Maandhar Paavam Pokkitum , Maa Thanthai Pakkal Aantitum Makatthuva Kiristhu Neerae; Kaetpeer Aerpeer Aezhai Neesar Enggal Jebam Thaazh Vaam Vaendal ; Irangkuveer Thayavotae . 3. Neer Thooyar Thooyar Thooyarae , Neer Kartthar Kartthar Karttharae, Enrenrum Aalveer Neerae; Pithaavin Aasanatthilae Maethaiyaay Veerrup Paangkinil Kartthaavaam Aaviyotae , Inrum Enrum Aega Maanpu Aega Maatsi Aega Maenmai Thaangki Aalveer Thaevareerae . Aamaen