பாடல் #7970
வெளியில் ஊரில் யாவும்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
1. வெளியில் ஊரில் யாவும் எல்லாஜீ வாத்துமாவும் இப்போதமர்ந்தது; என் மனமே, நீ பாடி, உன் கர்த்தரைக் கொண்டாடி ஜெபத் தியானமாயிரு. 2. பகலோன் அஸ்தமித்து ரா வந்ததால் ஒளிந்து, காணாமல் போயிற்று; போகட்டும்; இயேசுவான பகலோன் என்ற ஞான வெளிச்சமே என் பூரிப்பு. 3. பகல் முடிந்த பின்னும் நட்சத்திரங்கள் மின்னும் விண் மண்டலத்திலே எந்நாளின் வேலையான பிற்பாடவ்வண்ணமான சிங்காரம் தாரும், கர்த்தரே. 4. என் சிறுமை இருப்பை காண்பிக்கிற உடுப்பை இப்போ களைக்கிறேன்; அதற்குப் பதிலாக அந்நாளிலே நன்றாக அலங்கரிக்கப்படுவேன். 5. இந்நாளின் வேலையாலும் தலையுங் கையுங் காலும் சலித்துப் போயிற்று; இனியோ எந்தப் பாடும் எப்பாவக்கேடும் மாறும், என் மனமே, மகிழ்ந்திரு. 6. இப்போதுஞ் சுகமான பாடுத்துக் கொள்வாயாக இளைத்த தேகமே; ஆயாசமெல்லாம் ஆற, இனிப்படுக்கைத் தாழ; அகப்படும் குழியிலே. 7. உறக்கத்தால் கண்மூடும், இருட்டும் என்னைச் சூழும் நீரோ என் ஸ்வாமியே, என் ஆவி தேகத்துக்கும் சதிவராதிருக்கும் படிக்கென்னைத் தற்காப்பீரே 8. இக்குஞ்சைப் பட்சமாக அரவணைப்பீராக அன்புள்ள இயேசுவே; பேய் தந்திரம் வீணாக நற்றூதர் காவலாக இருக்கப்பண்ணும் கர்க்தரே. 9. அடுத்தவர்கள் மீதும் இராவில் கேடுந் தீதும் வராமல் யாவரும் அருள் நிழலின் கீழே சுகித்துத் தூங்க, நீரே அன்பாகக் கட்டளையிடும்.