பாடல் #7967
விஸ்வாசத்தோடு சாட்சி பாகர்ந்தே
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
1. விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே தம் வேலை முடித்தோர் நிமித்தமே, கர்த்தாவே உம்மைத் துதி செய்குவோம். அல்லேலூயா! அல்லேலூயா! 2. நீர் அவர் கோட்டை, வன்கன் மலையாம்; நீர் யுத்தத்தில் சேனைத் தலைவராம்; நீர் காரிருளில் பரஞ்சோதியாம். அல்லேலூயா! அல்லேலூயா! 3. முன் நாளில் பக்தர் நற்போராடியே வென்றாற்போல் நாங்கள் வீரராகவே பொன் க்ரீடம் பெற்றுக்கொள்வோமாகவே அல்லேலூயா! அல்லேலூயா! 4. இங்கே போராடி நாங்கள் களைத்தும், உம் பக்தர் மேன்மையில் விளங்கினும்; யாவரும் உம்மில் ஓர் சபை என்றும், அல்லேலூயா! அல்லேலூயா! 5. போர் நீண்டு மா கடூரமாகவே, கெம்பீரக் கீதம் விண்ணில் கேட்குமே, நாம் அதைக்கேட்டு தைரியம் கொள்வோமே. அல்லேலூயா! அல்லேலூயா! 6. செவ்வானம் மேற்கில் தோன்றி ஒளிரும்; மெய் வீரருக்கு ஓய்வு வாய்த்திடும்; சீர் பரதீசில் பாக்யம் அமையும். அல்லேலூயா! அல்லேலூயா! 7. மேலான பகல் பின் விடியும், பார்! வென்றோர் கெம்பீரமாய் எழும்புவார்; மாண்புறும் ராஜா முன்னே செல்லுவார். அல்லேலூயா! அல்லேலூயா! 8. அந்தக் கூட்டம் நாற்றிசை நின்றும் த்ரியேகருக்குத் துதி பாடியும் விண் மாட்சி வாசலுள் ப்ரவேசிக்கும். அல்லேலூயா! அல்லேலூயா!