பாடல் #7966
வியாதியஸ்தர் மாலையில்
🔤 Viyaathiyasthar Maalaiyil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. வியாதியஸ்தர் மாலையில் அவஸ்தையோடு வந்தனர்; தயாபரா, உம்மண்டையில் சர்வாங்க சுகம் பெற்றனர். 2. பற்பல துன்பம் உள்ளோறாய் இப்போதும் பாதம் அண்டினோம் ப்ரசன்னமாகித் தயவாய் கண்ணோக்குவீரென்றறிவோம் 3. விசாரம் சஞ்சலத்தினால் அநேகர் க்லேசப்பட்டனர்; மெய்ப்பக்தி அன்பின் குறைவால் அநேகர் சேர்வடைந்தனர். 4. உலகம் வீண் என்றறிந்தும் பற்றாசை பலர் கொண்டாரே; உற்றாரால் பலர் நொந்தாலும், மெய்நேசர் உம்மைத்தேடாரே 5. மாசற்ற தூய தன்மையைப் பூரணமாய்ப் பெறாமையால், எல்லோரும் சால துக்கத்தை அடைந்தோம் பாவப் பாசத்தால். 6. ஆ, கிறிஸ்துவே, மன்னுருவாய் மா துன்பம் நீரும் அடைந்தீர்; எப்பாடும் பாவமும் அன்பாய் ஆராய்ந்து பார்த்து அறிவீர், 7. உம் வார்த்தை இன்றும் பலிக்கும்; நீர் தொட்டால் சுகம் ஆவோமே, ஆரோக்கியம் எல்லாருக்கும் இம்மாலை தாரும், இயேசுவே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Viyaathiyasthar Maalaiyil Avasthaiyotu Vandhanar; Thayaabaraa, Ummantaiyil Sarvaangga Sugam Pertranar. 2. Parpala Thunbam Ulloraay Ippothum Paadham Antinom Prasannamaakith Thayavaay Kannokkuveerendrarivom 3. Visaaram Sanjjalatthinaal Anaegar Klaesappattanar; Meyppakthi Anpin Kuraivaal Anaegar Saervataindhanar. 4. Ulakam Veen Endrarinthum Parraasai Palar Kontaarae; Urraaraal Palar Nonthaalum, Meynaesar Ummaitthaetaarae 5. Maasartra Thooya Thanmaiyaip Pooranamaayp Peraamaiyaal, Ellorum Saala Thukkatthai Atainthom Paavap Paasatthaal. 6. Aa, Kiristhuvae, Mannuruvaay Maa Thunbam Neerum Ataintheer; Eppaatum Paavamum Anpaay Aaraaynthu Paartthu Ariveer, 7. Um Vaartthai Inrum Palikkum; Neer Thottaal Sugam Aavomae, Aarokkiyam Ellaarukkum Immaalai Thaarum, Yesuvae.