பாடல் #7943
மெய் ஜோதியாம் நல் மீட்பரே
🔤 Mey Jothiyaam Nal Meetparae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மெய் ஜோதியாம் நல் மீட்பரே நீர் தங்கினால் ராவில்லையே; என் நெஞ்சுக் கும்மை மறைக்கும் மேகம் வராமல் காத்திடும். 2. என்றைக்கும் மீட்பர் மார்பிலே நான் சாய்வது பேரின்பமே என்றாவலாய் நான் ராவிலும், சிந்தித்துத் தூங்க அருளும். 3. என்னோடு தங்கும் பகலில், சுகியேன் நீர் இராவிடில்; என்னோடே தங்கும் ராவிலும் உம்மாலே அஞ்சேன் சாவிலும். 4. இன்றைக்கு திவ்ய அழைப்பை, அசட்டை செய்த பாவியைத் தள்ளாமல், வல்ல மீட்பரே, உம்மிடம் சேர்த்துக் கொள்ளுமே. 5. வியாதியஸ்தர், வறியோர், ஆதரவற்ற சிறியோர், பலம்புவோர் எல்லாரையும் அன்பாய் விசாரித்தருளும். 6. பேரன்பின் சாகரத்திலும் நான் மூழ்கி வாழுமளவும், என் ஆயுள்காலம் முழுதும் உம் அருள் தந்து காத்திடும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Mey Jothiyaam Nal Meetparae Neer Thangkinaal Raavillaiyae; En Nenjsuk Kummai Maraikkum Maegam Varaamal Kaatthitum. 2. Enraikkum Meetpar Maarpilae Naan Saayvathu Paerinbamae Enraavalaay Naan Raavilum, Sinthitthuth Thoongga Arulum. 3. Ennotu Thangkum Pakalil, Sukiyaen Neer Iraavitil; Ennotae Thangkum Raavilum Ummaalae Anjsaen Saavilum. 4. Inraikku Thivya Azhaippai, Asattai Seytha Paaviyaith Thallaamal, Valla Meetparae, Ummidam Saertthuk Kollumae. 5. Viyaathiyasthar, Variyor, Aadharavartra Siriyor, Palampuvor Ellaaraiyum Anpaay Visaarittharulum. 6. Paeranpin Saagaratthilum Naan Moozhki Vaazhumalavum, En Aayulkaalam Muzhuthum Um Arul Thanthu Kaatthitum.