பாடல் #7939
மாட்சி போரைப் போரின் ஓய்வை
🔤 Maatsi Poraip Porin Oyvai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மாட்சிப்போரைப் போரின் ஓய்வைப் பாடு எந்தன் உள்ளமே; மாட்சி வெற்றிச் சின்னம்போற்றி பாடு வெற்றிக் கீதமே; மாந்தர் மீட்பர் கிறிஸ்து நாதர் மாண்டுப்பெற்றார் வெற்றியே. 2. காலம் நிறைவேற, வந்தார் தந்தைவார்த்தைமைந்தனாய்; ஞாலம் வந்தார் வானம்நீத்தே கன்னித் தாயார் மைந்தனாக இருள் நீக்கும் ஜோதியாய். 3. மூன்று பத்துஆண்டின் ஈற்றில் விட்டார் வீட்டுச்சேவைக்காய் தந்தை சித்தம் நிறைவேற்றி வாழ்ந்தார்;தந்தைசித்தமாய்ச் சிலுவையில் தம்மை ஈந்தார் தூய ஏக பலியாய். 4. வெற்றி கொண்ட சிலுவையே, இலை மலர் கனியில் ஒப்புயர்வு அற்றாய் நீயே! மேலாம் தரு பாரினில்! மீட்பின் சின்னம் ஆனாய்; மீட்பர் தொங்கி மாண்டனர் உன்னில். 5. பிதா சுதன் ஆவியான தூயராம் த்ரியேகரே, இன்றும் என்றும் சதாகாலம் மாட்சி தோத்ரம் எற்பீரே; மாட்சி தோத்ரம் நித்ய காலம் உன்னதத்தில் உமக்கே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Maatsipporaip Porin Oyvaip Paatu Endhan Ullamae; Maatsi Verrich Sinnamporri Paatu Verrik Keedhamae; Maandhar Meetpar Kiristhu Naadhar Maantupperraar Verriyae. 2. Kaalam Niraivaera, Vanthaar Thanthaivaartthaimaindhanaay; Njaalam Vanthaar Vaanamneetthae Kannith Thaayaar Maindhanaaga Irul Neekkum Jothiyaay. 3. Moonru Patthuaantin Eerril Vittaar Veettuchsaevaikkaay Thanthai Sittham Niraivaerri Vaazhnthaar;thanthaisitthamaaych Siluvaiyil Thammai Eenthaar Thooya Aega Paliyaay. 4. Verri Konda Siluvaiyae, Ilai Malar Kaniyil Oppuyarvu Arraay Neeyae! Maelaam Tharu Paarinil! Meetpin Sinnam Aanaay; Meetpar Thongki Maandanar Unnil. 5. Pithaa Sudhan Aaviyaana Thooyaraam Thriyaegarae, Inrum Enrum Sathaakaalam Maatsi Thothram Erpeerae; Maatsi Thothram Nithya Kaalam Unnathatthil Umakkae.