பாடல் #7920
பெலவீனரின் பெலனும்
🔤 Pelaveenarin Pelanum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பெலவீனரின் பெலனும் துக்கப்பட்டிருக்கிற பாவிகளுக்குத் திடனும் வைத்தியருமாகிய இயேசுவே, என் எஜமானே, கேட்டை நீக்கும் பலவானே. 2. என் இதயம் ஜென்ம பாவம் ஊறிய ஊற்றானது. முழுவதும் என் சுபாவம் நன்மையை விரோதித்து, பாவத்தின் விஷத்தினாலும் நிறையும் துர் இச்சையாலும். 3. ஆத்துமப் பகைஞராலே காயப்பட்டுப் போன நான் உம்மண்டைக்கு வாஞ்சையாலே ஓடிச்சேருமுன்னே தான் பேய் தன் கூட்டத்துடனேயும் என்னில் மீளவும் அம்பெய்யும். 4. செய்ய வேண்டிய ஜெபத்தைச் சொம்பல் மறிக்கின்றது, உமதாவி ஆத்துமத்தை நன்மைக் கேவுவதற்கு வரும் போதெதிர்த்திருக்கும் மாமிசம் அதைத் தடுக்கும். 5. நோயாம் பாவிகளுக்கான பரிகாரி, இயேசுவே, அப்புறம் இவ்வாதையான கேட்டைத் தாங்க மாட்டனே. ஆ, என் பேரிலே இரங்கும், உம்மாலே கேடெல்லாம் அடங்கும். 6. உம்முடைய ரத்த்ததாலே குற்றம் நீக்கி ரட்சியும்; எனக்கும் தாவியாலே நற்குணத்தை அருளும் கர்த்தரே, இவ்விதமாக நலத்தை அளிப்பீராக. 7. என் இருதயத்தில் வந்து தங்கும், என் சகாயரே; அப்போ துக்கத்தை மறந்து வெற்றியை அடைவேனே. உமக்குத் துதி உண்டாக என் ஜெபத்தைக் கேட்பீராக.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Pelaveenarin Pelanum Thukkappattirukkira Paavigalukkuth Thidanum Vaitthiyarumaakiya Yesuvae, En Ejamaanae, Kaettai Neekkum Palavaanae. 2. En Idhayam Jenma Paavam Ooriya Oorraanathu. Muzhuvathum En Supaavam Nanmaiyai Virothitthu, Paavatthin Vishatthinaalum Niraiyum Thur Ichsaiyaalum. 3. Aatthumap Pakainjaraalae Kaayappattup Pona Naan Ummantaikku Vaanjsaiyaalae Otichsaerumunnae Thaan Paey Than Koottatthudanaeyum Ennil Meelavum Ampeyyum. 4. Seyya Vaentiya Jebatthaich Sombal Marikkindrathu, Umathaavi Aatthumatthai Nanmaik Kaevuvatharku Varum Pothethirtthirukkum Maamisam Athaith Thatukkum. 5. Noyaam Paavigalukkaana Parikaari, Yesuvae, Appuram Ivvaathaiyaana Kaettaith Thaangga Maattanae. Aa, En Paerilae Irangkum, Ummaalae Kaetellaam Adangkum. 6. Ummutaiya Ratththathaalae Kurtram Neekki Ratsiyum; Enakkum Thaaviyaalae Narkunatthai Arulum Karttharae, Ivvidhamaaga Nalatthai Alippeeraaga. 7. En Irudhayatthil Vanthu Thangkum, En Sakaayarae; Appo Thukkatthai Maranthu Verriyai Ataivaenae. Umakkuth Thuthi Untaaga En Jebatthaik Kaetpeeraaga.