பாடல் #7919
பெருகு பெருகு
🔤 Peruku Peruku
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பெருக, பெருக, சீயோனே, சன்மார்க்கத்தில்; முற்சிநேகத்தை விடாதே; கிறிஸ்துக்குள் வேரூன்றி நில், அசதிக்குணம் ஆகாதே. நீ இடுக்க வாசற்குட்படு, பெருக, பெருக. 2. உத்திரி, உத்திரி, சீயோனே, இக்கட்டுக்கு நீ அஞ்சாமல், சாவுமட்டும் நல்ல உண்மையாயிரு ஜீவ க்ரீடம் லக்காகட்டும்; நிந்தை யாவையும் அனுபவி, உத்திரி, உத்திரி. 3. உன்னைக்கா, உன்னைக்கா, சீயோனே, நீ உலகின் வாழ்வை, மேன்மையை எண்ணாதே நீ பழைய சர்ப்பத்தின் ஆளுகைக்குக் கீழாகாதே லோக இன்பத்தை வெறுப்பாய் பார், உன்னைக்கா, உன்னைக்கா. 4. சீர் அறி, சீர் அறி, சீயோனே, உன்மனத்தை இந்த அந்தப் பக்கமாகச் சாய ஏவும் ஆவியைப் பின் செல்லாதிருப்பாயாக. நேரே போ யாவையும் நன்றாய் நீ சீர் அறி, சீர் அறி. 5. தேறிப்போ, தேறிப்போ, சீயோனே, வெளிப்படு; மற்றோர் போலே செத்திராதே, கிறிஸ்துக்குள் செழித்திரு. மாய வேஷமும் போதாதோ, ஜீவனும் பலமும் வேண்டாமோ தேறிப்போ, தேறிப்போ. 6. ஏகிப்போ, ஏகிப்போ, சீயோனே,வெளிப்டு; உன் பத்த்வின் மேன்மை காண இந்த வேளை ஏற்றது; நன்மை செய்யத்தக்கதாக கதவு திறந்தல்லவோ, ஏகிப்போ, ஏகிப்போ. 7. தொய்யாதே, தொய்யாதே, சீயோனே, என் சீரைக்கா. வெதுவெதுப்பாயிராதே, பந்தயந்தை நோக்கிப்பார். போ, பின்னானதை எண்ணாதே சீயோனே, கடை இக்கட்டிலே தொய்யாதே, தொய்யாதே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Peruga, Peruga, Seeyonae, Sanmaarkkatthil; Mursinaegatthai Vitaathae; Kiristhukkul Vaeroonri Nil, Asathikkunam Aakaathae. Nee Itukka Vaasarkutpatu, Peruga, Peruga. 2. Utthiri, Utthiri, Seeyonae, Ikkattukku Nee Anjsaamal, Saavumattum Nalla Unmaiyaayiru Jeeva Kreedam Lakkaagattum; Ninthai Yaavaiyum Anubavi, Utthiri, Utthiri. 3. Unnaikkaa, Unnaikkaa, Seeyonae, Nee Ulakin Vaazhvai, Maenmaiyai Ennaathae Nee Pazhaiya Sarppatthin Aalukaikkuk Keezhaakaathae Loga Inbatthai Veruppaay Paar, Unnaikkaa, Unnaikkaa. 4. Seer Ari, Seer Ari, Seeyonae, Unmanatthai Indha Andhap Pakkamaagach Saaya Aevum Aaviyaip Pin Sellaathiruppaayaaga. Naerae Po Yaavaiyum Nanraay Nee Seer Ari, Seer Ari. 5. Thaerippo, Thaerippo, Seeyonae, Velippatu; Marror Polae Setthiraathae, Kiristhukkul Sezhitthiru. Maaya Vaeshamum Pothaatho, Jeevanum Palamum Vaentaamo Thaerippo, Thaerippo. 6. Aekippo, Aekippo, Seeyonae,veliptu; Un Patthvin Maenmai Kaana Indha Vaelai Aertrathu; Nanmai Seyyatthakkathaaga Kathavu Thirandhallavo, Aekippo, Aekippo. 7. Thoyyaathae, Thoyyaathae, Seeyonae, En Seeraikkaa. Vethuvethuppaayiraathae, Pandhayanthai Nokkippaar. Po, Pinnaanathai Ennaathae Seeyonae, Katai Ikkattilae Thoyyaathae, Thoyyaathae.