பாடல் #7912
பிரியமான இயேசுவே
🔤 Piriyamaana Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பிரியமான இயேசுவே, என் நெஞ்சைத் தயவாக நீர் பூரிப்பாக்கி, என்னிலே பலத்தத் தேற்றலாகத் தெய்வீக அன்பை ஊற்றிய படியினால், உம்முடைய துதியைச் சொல்வேனாக. 2. என் நெஞ்சில் உம்மால்பற்றின சிநேகத் தீ எரியும், என் மனமும்மால் உத்தம மகிழ்ச்சியை அறியும் நான் உம்மைநோக்கும்போதொல்லாம் என் துக்கம் உம்மிலே உண்டாம் அருளினால் தெளியும். 3. நீர் என் வெளிச்சம், உம்மால் நான் திறந்த முகமாக பிதாவின் இன்பநெஞ்சைத்தான் என் ஆறுதலுக்காகக் கண்ணோக்குவேன், மாதயாவாய் நீர் என்னை நீங்கா ஜோதியாய் ப்ரகாசிப்பிப்பீராக. 4. நீர் மோட்சத்துக்குபோம்வழி இதற்குள்ளான யாரும் தப்பாய்ப் போகான், இதோ சரி விலகினோ ரெல்லாரும் அழிந்து போகிறார்களே. வழியாம் ஸ்வாமி, உம்மிலே நிலைக்க என்னைக் காரும். 5. நீர் சத்தியம், நான் உம்மையே தெரிந்து கொண்டிருப்பேன்; பொருளுஞ் சாரமும் நீரே; வீண் மாய்கையைவெறுப்பே உம்மாலே பாக்கியம் வரும். மெய்யே, என் நெஞ்சை என்றைக்கும் நான் உமக்கே கொடுப்பேன். 6. நீர் ஜீவன், என்னை நீர், நீரே தரும் பலம் ஏவட்டும். திடனில்லா அந்நேரமே என் நெஞ்சை நீர் திடத்தும் அப்போது வாழ்ந்து தேறுமே. இத்தேவ ஜீவன் என்னிலே மென்மேல்பலங் கொள்ளட்டும். 7. நீர் வானத்தப்பம், பஞ்சத்தில் பசி உம்மாலே ஆறும். நான்போம் வனாந்தரங்களில் என் மனமும்மை நாடும். பிதாவின் ஈவாம் மன்னாவே, நீர் என்னை வேறே இச்சைக்கே விலக்கமாக்க் காரும். 8. நீர் ஜீவ ஊற்று, உம்மிலே குடித்தால், தாகந் தீரும். நீர் தரும் ஈவு நித்தமே சுரக்கிற தண்ணீரும், என்னை நிரப்பி அன்புடன் கண்ணோக்கினால் உண்டாம் பலன் ஆரோக்கியம் நற்சீரும். 9. நீர் என்னை ஜோடிக்கும் உடை, நீர் என் அலங்கரிப்பு, நான் உம்முடைய நீதியை அணிவதென் வாஞ்சிப்பு. பூலோகத்தின் சிங்காரமாம் வினோத சம்ப்ரமம் எல்லாம் கனமில்லாத் தரிப்பு. 10. நீர் நான் சுகித்துத் தங்கிற அரண்மனையும் வீடும்; புயல் அடித்தும் விருதா, பேய் வீணாய் என்னைச் சீறும்; நான் உம்மில் நிற்பேன், ஆகையால் கெடேன்; பொல்லார் எழும்பினால் நீர் என் வழக்கைத்தீரும். 11. என் மேய்ப்பராயிருக்கிறீர், என் மேய்ச்சலும் நீர்தாமே, காணாமல் போன என்னை நீர் மா அன்பாய் மீட்டோராமே. இனி இவ்வாட்டை என்றைக்கும் நீர் சிதற வொட்டாதேயும், நான் உம்முடைய்யோனாமே. 12. நீர் என்றைக்கும் நான் வாஞ்சையாய்ப் பணிந்து கொள்ளும் பர்த்தா; நீர் என் ஆசாரியருமாய்ப் பலியாய் மாண்ட கர்த்தா. நீர் என்னை ஆளும் ராஜாவும், உம்மாலே எந்தப் போரிலும் ஜெயிப்பேன் மா சமர்த்தர். 13. நீர் உத்தம சிநேகிதர், என் நெஞ்சும்மண்டை சாயும்; நீர் உண்மையாஞ் சகோதரர், நீர் என்னைப் பார்க்குந் தாயும். நீர் நோயில் பரிகாரியே, உம்மாலே ஆறிப்போகுமே என் காயமும் விடாயும். 14. படையில் நீர் சேனாபதி, வில் கேடயஞ் சீராவும், கருங்கடலில் நீர்வழி காண்பிக்கும் சமுக்காவும், எழும்புங் கொந்தளிப்பிலே நீர் என் நங்கூரம், இயேசுவே, நான் உட்படுங்குடாவும். 15. நீர் ராவில் என் நட்சத்திரம், இருளில் என் தீவர்த்தி குறைவில் என் ஐஸ்வரியம், என் தாழ்வில் என் உயர்த்தி, கசப்பிலே என் மதுரம், நான் தொய்ந்தால் மீண்டும் என் மனம் பலக்க நீர் என் சக்தி. 16. நீர் ஜீவனின் விருட்சமும், நீர் செல்வங்கள் பொழியும் பூங்காவனமும், என்றைக்கும் சுகந்தருங் கனியும்; முள்ளுள்ள பள்ளத்தாக்கிலே என் ஆவிக்கு நீர், இயேசுவே, குளிர்ந்த பூஞ்செடியும். 17. நீர் துக்கத்தில் என் ஆறுதல், நீர் வாழ்வில் என் களிப்பு நீர் வேலையில் என் அலுவல், பகலில் என் சிந்திப்பு. நீர் ராவில் என் அடைக்கலம், நீர் தூக்கத்தில் என் சொப்பனம் விழிப்பில் என் குறிப்பு. 18. ஆ, ஒப்பில்லாத அழகே, நான் எத்தனை சொன்னாலும், என் நாவினால் முடியாதே; நான் என்ன வாஞ்சித்தாலும், அதெல்லாம் நீரே, இயேசுவே; மா தயவுள்ள நேசரே, நீர் என்றும் என்னை ஆளும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Piriyamaana Yesuvae, En Nenjsaith Thayavaaga Neer Poorippaakki, Ennilae Palatthath Thaertralaagath Theyveega Anpai Oorriya Patiyinaal, Ummutaiya Thuthiyaich Solvaenaaga. 2. En Nenjsil Ummaalparrina Sinaegath Thee Eriyum, En Manamummaal Utthama Makizhchsiyai Ariyum Naan Ummainokkumpothollaam En Thukkam Ummilae Untaam Arulinaal Theliyum. 3. Neer En Veliccham, Ummaal Naan Thirandha Mugamaaga Pithaavin Inbanenjsaitthaan En Aarudhalukkaagak Kannokkuvaen, Maadhayaavaay Neer Ennai Neengkaa Jothiyaay Prakaasippippeeraaga. 4. Neer Motsatthukkupomvazhi Idharkullaana Yaarum Thappaayp Pokaan, Itho Sari Vilakino Rellaarum Azhinthu Pokiraarkalae. Vazhiyaam Svaami, Ummilae Nilaikka Ennaik Kaarum. 5. Neer Satthiyam, Naan Ummaiyae Therinthu Kontiruppaen; Porulunj Saaramum Neerae; Veen Maaykaiyaiveruppae Ummaalae Paakkiyam Varum. Meyyae, En Nenjsai Enraikkum Naan Umakkae Kotuppaen. 6. Neer Jeevan, Ennai Neer, Neerae Tharum Palam Aevattum. Thidanillaa Annaeramae En Nenjsai Neer Thidatthum Appothu Vaazhnthu Thaerumae. Itthaeva Jeevan Ennilae Menmaelpalang Kollattum. 7. Neer Vaanatthappam, Panjjatthil Pasi Ummaalae Aarum. Naanpom Vanaandharanggalil En Manamummai Naatum. Pithaavin Eevaam Mannaavae, Neer Ennai Vaerae Ichsaikkae Vilakkamaakk Kaarum. 8. Neer Jeeva Oorru, Ummilae Kutitthaal, Thaagan Theerum. Neer Tharum Eevu Nitthamae Surakkira Thanneerum, Ennai Nirappi Anpudan Kannokkinaal Untaam Palan Aarokkiyam Narseerum. 9. Neer Ennai Jotikkum Utai, Neer En Alanggarippu, Naan Ummutaiya Neethiyai Anivathen Vaanjsippu. Poologatthin Singkaaramaam Vinodha Sampramam Ellaam Kanamillaath Tharippu. 10. Neer Naan Sukitthuth Thangkira Aranmanaiyum Veetum; Puyal Atitthum Viruthaa, Paey Veenaay Ennaich Seerum; Naan Ummil Nirpaen, Aakaiyaal Ketaen; Pollaar Ezhumpinaal Neer En Vazhakkaittheerum. 11. En Maeypparaayirukkireer, En Maeycchalum Neerthaamae, Kaanaamal Pona Ennai Neer Maa Anpaay Meettoraamae. Ini Ivvaattai Enraikkum Neer Sidhara Vottaathaeyum, Naan Ummutaiyyonaamae. 12. Neer Enraikkum Naan Vaanjsaiyaayp Paninthu Kollum Partthaa; Neer En Aasaariyarumaayp Paliyaay Maanda Kartthaa. Neer Ennai Aalum Raajaavum, Ummaalae Endhap Porilum Jeyippaen Maa Samartthar. 13. Neer Utthama Sinaekidhar, En Nenjsummantai Saayum; Neer Unmaiyaanj Sakodharar, Neer Ennaip Paarkkun Thaayum. Neer Noyil Parikaariyae, Ummaalae Aarippokumae En Kaayamum Vitaayum. 14. Pataiyil Neer Saenaabathi, Vil Kaedayanj Seeraavum, Karunggatalil Neervazhi Kaanpikkum Samukkaavum, Ezhumpung Kondhalippilae Neer En Nangkooram, Yesuvae, Naan Utpatungkutaavum. 15. Neer Raavil En Natsatthiram, Irulil En Theevartthi Kuraivil En Aisvariyam, En Thaazhvil En Uyartthi, Kasappilae En Mathuram, Naan Thoynthaal Meentum En Manam Palakka Neer En Sakthi. 16. Neer Jeevanin Virutsamum, Neer Selvanggal Pozhiyum Poongkaavanamum, Enraikkum Sugandharung Kaniyum; Mullulla Pallatthaakkilae En Aavikku Neer, Yesuvae, Kulirndha Poonjsetiyum. 17. Neer Thukkatthil En Aarudhal, Neer Vaazhvil En Kalippu Neer Vaelaiyil En Aluval, Pakalil En Sinthippu. Neer Raavil En Ataikkalam, Neer Thookkatthil En Soppanam Vizhippil En Kurippu. 18. Aa, Oppillaadha Azhakae, Naan Etthanai Sonnaalum, En Naavinaal Mutiyaathae; Naan Enna Vaanjsitthaalum, Athellaam Neerae, Yesuvae; Maa Thayavulla Naesarae, Neer Enrum Ennai Aalum.