பாடல் #7909
பிதாவாங் கர்த்தர் பேரிலே
🔤 Pithaavaang Kartthar Paerilae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பிதாவாங் கர்த்தர் பேரிலே ஏக விசுவாசமாக இருக்கிறோம், எங்களையே நேசித் தெங்கள் நன்மைக்காக விண்மண் யாவையுஞ் சிஷ்டித்தார். ஆவிதேகத்தையுந்தந்தார். ஊண்உடுப்பையும் அளித்தார், மிகவும் இரங்கி வந்தார், அவர் மகா தயாபரர், சருவத்திற்கும் வல்லவர். 2. ஒன்றான தேவ மைந்தனும் எங்கள் ஆண்டவருமான அன்புள்ள இயேசுகிறிஸ்தையும் நாங்கள் நெஞ்சின் பக்தியான விசுவாசமாய்த் துதித்து தோத்திரிக்கிறோம்; தாழ்வான எங்கள் ஜென்மமாய் ஜென்மித்து பாடுபட்டிகழ்ச்சியான மரத்தில் மாண்டு, மூன்றாம் நாள் உயிர்த்தார் தெய்வ சக்தியால். 3. தேவாவியானோர் பேரிலும் நாங்கள் விசுவாசமானோர் இருவரோடே அவரும் ஏக தேவ வஸ்துவானோர். அவர் ஆளும் மெய்ச்சபையும், நீதியரின் ஒருமிப்பும், பாவிகளுக்கு மன்னிப்பும், செத்தோர் உயிர்த்தெழுதலும் உண்டே, அனந்த ஜீவனும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Pithaavaang Kartthar Paerilae Aega Visuvaasamaaga Irukkirom, Enggalaiyae Naesith Thenggal Nanmaikkaaga Vinman Yaavaiyunj Sishtitthaar. Aavithaegatthaiyundhanthaar. Oonutuppaiyum Alitthaar, Migavum Irangki Vanthaar, Avar Makaa Thayaabarar, Saruvatthirkum Vallavar. 2. Onraana Thaeva Maindhanum Enggal Aandavarumaana Anpulla Yesukiristhaiyum Naanggal Nenjsin Pakthiyaana Visuvaasamaayth Thuthitthu Thotthirikkirom; Thaazhvaana Enggal Jenmamaay Jenmitthu Paatubattigazhchsiyaana Maratthil Maantu, Moonraam Naal Uyirtthaar Theyva Sakthiyaal. 3. Thaevaaviyaanor Paerilum Naanggal Visuvaasamaanor Iruvarotae Avarum Aega Thaeva Vasthuvaanor. Avar Aalum Meycchapaiyum, Neethiyarin Orumippum, Paavigalukku Mannippum, Setthor Uyirtthezhudhalum Untae, Anandha Jeevanum.