பாடல் #7908
பாதகரின் தீவினைக்கும்
🔤 Paadhakarin Theevinaikkum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பாதகரின் தீவினைக்கும் பாவிகளின் பாதைக்கும் துர்ச்சனரின் தோழமைக்கும் மார்க்கத்துக்கும் மிகவும் தூரமாகி; கர்த்தரைத் அவருக்கொப்புக் கொடுத்தோன் என்றும் பாக்கியம் பெருத்தோன். 2. கர்த்தர் தான் அன்பாகத் தந்து போதிவிக்கும் வார்த்தையை வாஞ்சையார் ஆராய்ந்துவந்து, அல்லும் பகலும் அதை யோசித்து உட்கொள்பவன் மிகுதியும் பாக்கியன்; அவர் ஆவி என்றென்றைக்கும் அம்மன்னாவினால் பிழைக்கும். 3. அவன் ஆற்றுக்காலிடத்தில் நடப்பட்டு இனிய கனிகளைத் தருணத்தில் தருஞ் செழிப்பாகிய நல் மரத்துக்கொத்தவன். அவன் நல்ல யோக்கியான்; அவன் நன்மையாய்ப் பலிக்கும், 4. ஆகிலும் ஆகதாதவர்கள் காற்றில் ஓடிப்போம் பதர்; ஞாயத் தீர்ப்பிலே அவர்கள் தள்ளப்பட்டு அழிவர். நீதிமான்களின் வழி கர்த்தருக்குப் பிரீதி, அது ரட்சிப்பாய் முடியும்; துஷ்டர் மார்க்கமோ அழியும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Paadhakarin Theevinaikkum Paavigalin Paathaikkum Thurcchanarin Thozhamaikkum Maarkkatthukkum Migavum Thooramaaki; Karttharaith Avarukkoppuk Kotutthon Enrum Paakkiyam Perutthon. 2. Kartthar Thaan Anpaagath Thanthu Pothivikkum Vaartthaiyai Vaanjsaiyaar Aaraaynthuvanthu, Allum Pakalum Athai Yositthu Utkolpavan Mikuthiyum Paakkiyan; Avar Aavi Enrenraikkum Ammannaavinaal Pizhaikkum. 3. Avan Aarrukkaalidatthil Natappattu Iniya Kanigalaith Tharunatthil Tharunj Sezhippaakiya Nal Maratthukkotthavan. Avan Nalla Yokkiyaan; Avan Nanmaiyaayp Palikkum, 4. Aakilum Aagathaadhavarkal Kaarril Otippom Pathar; Njaayath Theerppilae Avarkal Thallappattu Azhivar. Neethimaankalin Vazhi Karttharukkup Pireethi, Athu Ratsippaay Mutiyum; Thushtar Maarkkamo Azhiyum.