பாடல் #7900
பரத்திலேயிருந்து தான்
🔤 Paratthilaeyirunthu Thaan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பரத்திலேயிருந்து தான் அனுப்பப்பட்ட தூதன் நான், நற்செய்தி அறிவிக்கிறேன். பயப்படாதிருங்களேன். 2. இதோ, எல்லா ஜனத்துக்கும் பெரிய நன்மையாய் வரும் மகிழ்ச்சியைக் களிப்புடன் நான் கூறுஞ் சுவிசேஷகன். 3. இன்றுங்கள் கர்த்தரானவர் மேசியா உங்கள் ரட்சகர். தாவீதின் ஊரில் திக்கில்லார் ரட்சிப்புக்காகப் பிறந்தார் 4. பரத்திலே நாம் ஏகமாய் இனி இருக்கத் தக்கதாய் இக்கட்டும் பாவமுமெல்லாம் இம்மீட்பரால் நிவர்த்தியாம். 5. குறிப்பைச் சொல்வேன்; ஏழையாய் துணியில் சுற்றப்பட்டதாய் இப்பிள்ளை முன்னணையிலே படுக்கும்; யார், கர்த்தர்தாமே. (விசுவாசிகள் கூறுவது) 6. களிப்பாய் நாமும் மேய்ப்பரின் பின்னாலே சென்று, ஸ்வாமியின் ஈவானதை நாம் கேட்ட சொல் படியே பார்ப்போம் வாருங்கள். 7. யார் அங்கே: முன்னணையிலே கிடக்கின்றார், என் மனமே, இப்பிள்ளையை நீ உற்றுப்பார், இதே உன் இயேசு ஆண்டவர். 8. என் ஸ்வாமி, வாழ்க, பாவியை நீர் கைவிடாமல் இத்துணை தாழ்வாய் என்னண்டைவந்தது அளவில்லாத தயவு. 9. எல்லாம் படைத்த தேவரீர் இம்மட்டுக்கும் இறங்கினீர்; இங்கே இப்புல்லின் மேல் ஐயோ, நீர், ஸ்வாமி, வைக்கப்பட்டீரோ. 10. பூலோகம் வெகுவத்தனை விஸ்தாரம் நேர்த்தி மகிமை; ஆனாலும் உம்மைகொள்ளுமோ அதுமக்கொரு தொட்டிலோ. 11. மகா ராஜாவே உமது பொற்சரிகை சிங்காரிப்பு வில்லுதிப்பட்டும் ஏதெனில் துணியின் துண்டு, காய்ந்தபுல் 12. பூலோகத்து ப்ரஸ்தாபமும் மினுக்கு செல்வம் ஆஸ்தியும் அனைத்தும் மாய்கை என்று நீர் இத்தால் நன்றாகக்காண்பித்தீர். 13. ஆ, இன்பமான இயேசுவே, மெய் ஆஸ்தியான உம்மையே நான் பெற்றிருக்க என்றைக்கம் என் நெஞ்சில் வாசமாயிரும். 14. அத்தால் நான் நித்தம் பூரிப்பாய் இருந்து, மாமகிழ்ச்சியாய் இம்மாய்கையை வெறுக்கிறேன், கதியாம் உம்மைப் பாடுவேன். 15. பிரிய ஏக மைந்த்னைப் பாராமல் தந்த ஸ்வாமியை நாம் தோத்திரிப்போம் பூமிக்கு ரட்சிப்பின் நாள் உதித்தது.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Paratthilaeyirunthu Thaan Anuppappatta Thoodhan Naan, Narseythi Arivikkiraen. Payappataathirunggalaen. 2. Itho, Ellaa Janatthukkum Periya Nanmaiyaay Varum Makizhchsiyaik Kalippudan Naan Koorunj Suvisaeshakan. 3. Inrunggal Karttharaanavar Maesiyaa Unggal Ratsakar. Thaaveethin Ooril Thikkillaar Ratsippukkaagap Piranthaar 4. Paratthilae Naam Aegamaay Ini Irukkath Thakkathaay Ikkattum Paavamumellaam Immeetparaal Nivartthiyaam. 5. Kurippaich Solvaen; Aezhaiyaay Thuniyil Surtrappattathaay Ippillai Munnanaiyilae Patukkum; Yaar, Karttharthaamae. (visuvaasigal Kooruvathu) 6. Kalippaay Naamum Maeypparin Pinnaalae Senru, Svaamiyin Eevaanathai Naam Kaetta Sol Patiyae Paarppom Vaarunggal. 7. Yaar Angkae: Munnanaiyilae Kidakkinraar, En Manamae, Ippillaiyai Nee Urruppaar, Ithae Un Yesu Aandavar. 8. En Svaami, Vaazhka, Paaviyai Neer Kaivitaamal Itthunai Thaazhvaay Ennantaivandhathu Alavillaadha Thayavu. 9. Ellaam Pataittha Thaevareer Immattukkum Irangkineer; Ingkae Ippullin Mael Aiyo, Neer, Svaami, Vaikkappatteero. 10. Poologam Vekuvatthanai Visthaaram Naertthi Makimai; Aanaalum Ummaikollumo Athumakkoru Thottilo. 11. Makaa Raajaavae Umathu Porsarikai Singkaarippu Villuthippattum Aethenil Thuniyin Thuntu, Kaayndhapul 12. Poologatthu Prasthaabamum Minukku Selvam Aasthiyum Anaitthum Maaykai Enru Neer Itthaal Nanraagakkaanpittheer. 13. Aa, Inbamaana Yesuvae, Mey Aasthiyaana Ummaiyae Naan Perrirukka Enraikkam En Nenjsil Vaasamaayirum. 14. Atthaal Naan Nittham Poorippaay Irunthu, Maamakizhchsiyaay Immaaykaiyai Verukkiraen, Kathiyaam Ummaip Paatuvaen. 15. Piriya Aega Mainthnaip Paaraamal Thandha Svaamiyai Naam Thotthirippom Poomikku Ratsippin Naal Uthitthathu.