பாடல் #7883
நாதன் வேதம் என்றும்
🔤 Naadhan Vaedham Enrum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நாதன் வேதம் என்றும் எங்கள் வழி காட்டும்; அதை நம்புவோர்க்கும் மகிழ் ஒளி வீசும். 2. ஆறுதலின் வேதம், மீட்பின் சுவிசேஷம், சத்ரு கிட்டும்போதும் பயம் முற்றும் நீக்கும். 3. புயல், அலை மோதின், மேகம் இருள் மூடின், வேதம் ஒளி வீசும், சேஷம வழி சேர்க்கும். 4. வாக்குக் கெட்ட இன்பம், எண்ணில்லாத செல்வம், பேதை மானிடர்க்கும் தெய்வ வார்த்தை ஈயும். 5. ஜீவனுள்ளமட்டும் வேதம் பெலன் தரும்; சாவு வரும்போதும் வேதம் ஆற்றித்தேற்றும். 6. நாதா, உந்தன் வாக்கைக் கற்றுணர்ந்து, உம்மை நேசித்தடியாரும் என்றும் பற்றச் செய்யும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Naadhan Vaedham Enrum Enggal Vazhi Kaattum; Athai Nampuvorkkum Makizh Oli Veesum. 2. Aarudhalin Vaedham, Meetpin Suvisaesham, Sathru Kittumpothum Payam Murrum Neekkum. 3. Puyal, Alai Mothin, Maegam Irul Mootin, Vaedham Oli Veesum, Saeshama Vazhi Saerkkum. 4. Vaakkuk Ketta Inbam, Ennillaadha Selvam, Paethai Maanidarkkum Theyva Vaartthai Eeyum. 5. Jeevanullamattum Vaedham Pelan Tharum; Saavu Varumpothum Vaedham Aarritthaerrum. 6. Naathaa, Undhan Vaakkaik Karrunarnthu, Ummai Naesitthatiyaarum Enrum Partrach Seyyum.