பாடல் #7869
நாள் வேகமாய்க் கழியுமே
🔤 Naal Vaegamaayk Kazhiyumae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நாள் வேகமாய்க் கழியுமே, நாம் மறுமைக்குப் போவோமே, ஆனாலுஞ் சாவை மனிதர் அவரவர் நன்றாய் நினைக்க அசடர். 2. நீர்க் குமிழி கானாவுக்கும் ஒப்பாய்ச் சுகமும் ஜீவனும் ஓர் நிமிஷத்தில் போகாதோ, ஆவியாதோ, தினம் அதை நாம் காணோமோ. 3. நீரோ, யென் கர்த்தரே, 'மாறீர்' எனக்கென்றைக்கும் இருப்பீர். உள்ளதெல்லாம் போகட்டுமே பயப்படேன். கர்த்தாவாம் உம்மைப் பற்றினேன். 4. ஆ, இயேசுவே; என் முடிவைத் தினம் நினைக்கும் புத்தியை நான் உம்மால் தான் அடையவும் விழிக்கவும் சகாயம் பண்ணியருளும். 5. கடை இக்கட்டிலும் லோகமும் லௌகீக வாழ்வும் இச்சையும் உதவுமோ, மனிதனே, பாழாகுமே அழியா நன்மை தேவையே, 6. ஆகாத மாயையே, நீ போ, நீ சாரமற்ற தல்லவோ, என் ஆவி தேடும் பாக்கியம் மெய்ப் பாக்கியம், இயேசு நீர் தான் என் பொக்கிஷம். 7. நான் உம்மை அங்கே மோட்சத்தில் என் கண்களாலே காண்கையில் அப்போ நான் பாக்கியனாமே, ஆ, இயேசுவே, அதற்கொத்தாசை செய்வீரே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Naal Vaegamaayk Kazhiyumae, Naam Marumaikkup Povomae, Aanaalunj Saavai Manidhar Avaravar Nanraay Ninaikka Asatar. 2. Neerk Kumizhi Kaanaavukkum Oppaaych Sugamum Jeevanum Or Nimishatthil Pokaatho, Aaviyaatho, Thinam Athai Naam Kaanomo. 3. Neero, Yen Karttharae, 'maareer' Enakkenraikkum Iruppeer. Ullathellaam Pogattumae Payappataen. Kartthaavaam Ummaip Parrinaen. 4. Aa, Yesuvae; En Mutivaith Thinam Ninaikkum Putthiyai Naan Ummaal Thaan Ataiyavum Vizhikkavum Sakaayam Panniyarulum. 5. Katai Ikkattilum Logamum Laukeega Vaazhvum Ichsaiyum Udhavumo, Manidhanae, Paazhaakumae Azhiyaa Nanmai Thaevaiyae, 6. Aakaadha Maayaiyae, Nee Po, Nee Saaramartra Thallavo, En Aavi Thaetum Paakkiyam Meyp Paakkiyam, Yesu Neer Thaan En Pokkisham. 7. Naan Ummai Angkae Motsatthil En Kankalaalae Kaankaiyil Appo Naan Paakkiyanaamae, Aa, Yesuvae, Adharkotthaasai Seyveerae.