பாடல் #7850
தூதர்கள் சந்தோஷமாக
🔤 Thoodharkal Santhoshamaaga
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தூதர்கள் சந்தோஷமாகப் பாடவே, என்னிலே நெஞ்சுதுள்வதாக. கேளுங்கள், ஆகாசமெங்கும் கிறிஸ்துவின் – பிறப்பின் கீதங்கள் முழங்கும். 2. இன்று ரட்சகர் பிறந்தார், நமது – மீட்புக்கு மீட்பராய் உதித்தார். தேவமைந்தன் தாழ வந்தார். கடவுள்,-நமக்குள் மாந்தனாய்ப் பிறந்தார். 3. கேட்டை நம்மை விட்டகற்ற, இன்றைக்கு- நமக்கு தாம் பிரியப்பட்ட மைந்தனைக் கொடுத்த நல்ல ஆண்டவர்,- மனிதர் சத்துராரி அல்ல. 4. தம்மை நமக்கீவாய்த் தந்து, நம்மண்மை- வேதனை எல்லாம் நீக்க வந்து மீட்பரான தேவ பிள்ளை நேசமும்- தயவும் அற்றிருப்பதில்லை. 5. தாம் நராட்களைப் பகைத்தால், அல்லது- கேட்டுக்குத் தீர்த்துக்கொண்டு வைத்தால், என் இச்சென்மமாய்ப் பிறப்பார். ஏன் அவர்,-மனிதர் பாரத்தைச் சுமப்பார். 6. கெட்டுப்போன நமக்காகக் கஸ்தியாய்- நோவுமாய் உத்தரித்துச் சாக, ஆட்டுக்குட்டியாகத் தாமே தாழ்மையாய்-சாதுவாய் இங்கே வந்தோராமே. 7. அவர் வெகு பட்சத்தோடே ஏழையை- நீசனைப் பார்த்து, அவனோடே; என் சகோதரா, என்னாலே நோய்க்கெல்லாம்- முடிவாம் என்கிறார் அன்பாலே. 8. ஆகையால் எல்லாருமாகத் துக்கத்தைத் – தீர்ப்பாரை அண்டிக்கொள்வோமாக. நரநேசர் இவர்தாமே க்டாட்சமும் ஜீவனும் இவரால் உண்டாமே. 9. துன்பத்தால் வதைந்தபேரே, சகல-ஆனந்த செல்வத்துக்கும்நேரே போகும் வாசலும் வழியும் கிறிஸ்தல்லோ;- பாடிப்போ மிஞ்சியும், முடியும். 10. எவனைத் தன் பாவங்குத்தி, இரவும்- பகலும் கவலைப் படுத்தி வருமோ, அவனுக்காக ரட்சகத் வந்தவர் மத்தியஸ்தராக. 11. ஏழைகைள் தாராளமாகக் கிறிஸ்தண்டை- கைகளை நீட்டுவார்களாக. இங்கே ஆத்தம்ம் பிழைக்கும் சகல- பூரண நன்மையுங் கிடைக்கும். 12. உம்மைக்கொம்பாய் நான் பிடிப்பேன். மீட்பரே,- உம்மிலே, என்றைக்குந் தரிப்பேன்; நீர் என் ஜீவன், சாவைக்காணேன், சாபமே,- திகிலே, போ, நான் நீங்கலானேன். 13. என் கடன் என்மேல் நிற்காது என் திரள்- பாவங்கள் அப்புறங் காணாது. யாவையுஞ் சுமந்து தீர்ப்பர், ஸ்வாமி, நீர்-தேவரீர் மா பலத்த மீட்பர். 14. உம்மால் சுத்தமாயிருப்பேன், மா தூய- பூரண நீதியை உடுப்பேன். உம்மை மனதில்அடைப்பேன். உம்மையே – அதிலே ஆஸ்தியாகவைப்பேன். 15. இங்கே உமக்குப்பிழைப்பேன் உம்மையே- சாவிலே பற்றிக்கொண்டணைப்பேன். அங்கே எனக்கென்றென்றைக்கும் உம் திவ்ய- பாக்கிய சமுகங் கிடைக்கும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thoodharkal Santhoshamaagap Paadavae, Ennilae Nenjsuthulvathaaga. Kaelunggal, Aakaasamengkum Kiristhuvin – Pirappin Keedhanggal Muzhangkum. 2. Inru Ratsakar Piranthaar, Namathu – Meetpukku Meetparaay Uthitthaar. Thaevamaindhan Thaazha Vanthaar. Katavul,-namakkul Maandhanaayp Piranthaar. 3. Kaettai Nammai Vittakartra, Inraikku- Namakku Thaam Piriyappatta Maindhanaik Kotuttha Nalla Aandavar,- Manidhar Satthuraari Alla. 4. Thammai Namakkeevaayth Thanthu, Nammanmai- Vaedhanai Ellaam Neekka Vanthu Meetparaana Thaeva Pillai Naesamum- Thayavum Arriruppathillai. 5. Thaam Naraatkalaip Pakaitthaal, Allathu- Kaettukkuth Theertthukkontu Vaitthaal, En Ichsenmamaayp Pirappaar. Aen Avar,-manidhar Paaratthaich Sumappaar. 6. Kettuppona Namakkaagak Kasthiyaay- Novumaay Uttharitthuch Saaga, Aattukkuttiyaagath Thaamae Thaazhmaiyaay-saathuvaay Ingkae Vanthoraamae. 7. Avar Veku Patsatthotae Aezhaiyai- Neesanaip Paartthu, Avanotae; En Sakodharaa, Ennaalae Noykkellaam- Mutivaam Enkiraar Anpaalae. 8. Aakaiyaal Ellaarumaagath Thukkatthaith – Theerppaarai Antikkolvomaaga. Naranaesar Ivarthaamae Ktaatsamum Jeevanum Ivaraal Untaamae. 9. Thunbatthaal Vathaindhapaerae, Sakala-aanandha Selvatthukkumnaerae Pokum Vaasalum Vazhiyum Kiristhallo;- Paatippo Minjsiyum, Mutiyum. 10. Evanaith Than Paavangkutthi, Iravum- Pakalum Kavalaip Patutthi Varumo, Avanukkaaga Ratsakath Vandhavar Matthiyastharaaga. 11. Aezhaikail Thaaraalamaagak Kiristhantai- Kaigalai Neettuvaarkalaaga. Ingkae Aatthamm Pizhaikkum Sakala- Poorana Nanmaiyung Kitaikkum. 12. Ummaikkompaay Naan Pitippaen. Meetparae,- Ummilae, Enraikkun Tharippaen; Neer En Jeevan, Saavaikkaanaen, Saabamae,- Thikilae, Po, Naan Neenggalaanaen. 13. En Katan Enmael Nirkaathu En Thiral- Paavanggal Appurang Kaanaathu. Yaavaiyunj Sumanthu Theerppar, Svaami, Neer-thaevareer Maa Palattha Meetpar. 14. Ummaal Sutthamaayiruppaen, Maa Thooya- Poorana Neethiyai Utuppaen. Ummai Manathilataippaen. Ummaiyae – Athilae Aasthiyaagavaippaen. 15. Ingkae Umakkuppizhaippaen Ummaiyae- Saavilae Parrikkondanaippaen. Angkae Enakkenrenraikkum Um Thivya- Paakkiya Samugang Kitaikkum.