பாடல் #7842
தாழ்விலிருந்து கூப்பிடும்
🔤 Thaazhvilirunthu Kooppitum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தாழ்விலிருந்து கூப்பிடும் என் சத்தங் கேட்டன்பாக என் அழுகை அனைத்துக்கும் செவி கொடுப்பீராக; கர்த்தாவே, பாவக் குற்றத்தை நீர் மன்னியாமல், நீதியைப் பார்த்தால் யார் நிற்கக்கூடும். 2. மன்னிப்பை எவனானிலும் தன் புண்ணியங்களாலே அடையான்; உம்மை யாவரும் தாழ்வான மனத்தாலே பணிந்து பயப்படவே, மனத்தரிதிரருக்கே மன்னிக்கிறீர், கர்த்தாவே. 3. நான் கர்த்தரைக் கண்ணோக்குவேன், என் புண்ணியம் அவத்தம்; தெய்வன்பையே நான் நம்புவேன்; அதற்கு வாக்குத்தத்தம் மெய்யான வேதவார்த்தையில் உண்டாமே, நான் என்மனத்தில் அதற்குக் காத்திருப்பேன். 4. ராச்சாமங் காப்பவர், எப்போ விடியும் என்பதாக நிற்க, என் மனமே, நீயோ அதிக ஆவலாகக் கர்த்தாவை நோக்கிக்காத்திரு; ஆ, இஸ்ரவேலே, ஸ்வாமிக்குக் காத்தே இரு, ரட்சிப்பார். 5. என் பாவம் பெரிதாகிலும் தெய்வன் பதிகமாமே; கேடெத்தனை பெருகியும்; மீட்பதற்கும் பெரிதே, ஆ,இஸ்ரவேலின் பாவங்கள் அதைத்தும் நீக்கும் மீட்குதல் கர்த்தாவினாலே ஆகும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thaazhvilirunthu Kooppitum En Satthang Kaettanpaaga En Azhukai Anaitthukkum Sevi Kotuppeeraaga; Kartthaavae, Paavak Kurtratthai Neer Manniyaamal, Neethiyaip Paartthaal Yaar Nirkakkootum. 2. Mannippai Evanaanilum Than Punniyanggalaalae Ataiyaan; Ummai Yaavarum Thaazhvaana Manatthaalae Paninthu Payappatavae, Manattharithirarukkae Mannikkireer, Kartthaavae. 3. Naan Karttharaik Kannokkuvaen, En Punniyam Avattham; Theyvanpaiyae Naan Nampuvaen; Adharku Vaakkutthattham Meyyaana Vaedhavaartthaiyil Untaamae, Naan Enmanatthil Adharkuk Kaatthiruppaen. 4. Raachsaamang Kaappavar, Eppo Vitiyum Enbathaaga Nirka, En Manamae, Neeyo Athiga Aavalaagak Kartthaavai Nokkikkaatthiru; Aa, Isravaelae, Svaamikkuk Kaatthae Iru, Ratsippaar. 5. En Paavam Perithaakilum Theyvan Pathigamaamae; Kaetetthanai Perukiyum; Meetpatharkum Perithae, Aa,isravaelin Paavanggal Athaitthum Neekkum Meetkudhal Kartthaavinaalae Aakum.