பாடல் #7826
சாந்தமுள்ள இயேசுவே
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
1. சாந்தமுள்ள இயேசுவே, பாலன் முகம் பாருமே; என்னில் தயை கூறுமேன், என் உள்ளத்தில் தங்குமேன். 2. உம்மை நாடிப் பற்றுவேன், என்னை ஏற்றுக் கொள்ளுமேன்; மோட்ச ராச்சியத்திலே எனக்கிடம் தாருமே. 3. இன்ப முகம் காட்டுவீர். என்னைக் கையில் ஏந்துவீர்; உமக்கேற்றோன் ஆகவே சுத்தம் பண்ணும், இயேசுவே 4. தீயோர் துஷ்ட செய்கையை, நான் செய்யாபடி என்னை நீர் நடத்தி ஆளுமே, என்னில் வாசம் பண்ணுமேன். 5. ஆ, அன்புள்ள இயேசுவே, அடியேனைப் பாருமே, என்னை அன்பாய் ரட்சியும் மோட்ச பாக்கியம் அருளும்.