பாடல் #7825
சிலுவைக் கொடி முன்செல்ல
🔤 Siluvaik Koti Munsella
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சிலுவைக் கொடி முன்செல்ல செல்வார் நம் வேந்தர் போர் செய்ய; நம்ஜீவன் ஆனோர் மாண்டனர் தம் சாவால் ஜீவன் தந்தனர் 2. மெய்ச் சத்யம் நாட்டப் பாடுற்றார், நல் வாலிபத்தில் மரித்தார்; நம் மீட்பர் ரத்தம் பீரிற்றே, நம்நெஞ்சம் தூய்மை ஆயிற்றே. 3. முன்னுரை நிறைவேறிற்றே; மன்னர் தம் கொடி ஏற்றுமே; பலக்கும் அன்பின் வல்லமை சிலுவை வேந்தர் ஆளுகை. 4. வென்றிடும் அன்பின் மரமே! வெல்வேந்தர் செங்கோல் சின்னமே! உன் நிந்தை மாட்சி ஆயிற்றே, மன்னர் உன்மீதி ஆண்டாரே. 5. உன்னில் ஓர்நாளில் ஆண்டவர் மன்னுயிர்சாபம் போக்கினர்; ஒப்பற்ற செல்வம் தம்மையே ஒப்பித்து மீட்டார் எம்மையே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Siluvaik Koti Munsella Selvaar Nam Vaendhar Por Seyya; Namjeevan Aanor Maandanar Tham Saavaal Jeevan Thandhanar 2. Meych Sathyam Naattap Paaturraar, Nal Vaalibatthil Maritthaar; Nam Meetpar Rattham Peerirrae, Namnenjjam Thooymai Aayirrae. 3. Munnurai Niraivaerirrae; Mannar Tham Koti Aerrumae; Palakkum Anpin Vallamai Siluvai Vaendhar Aalukai. 4. Venritum Anpin Maramae! Velvaendhar Sengkol Sinnamae! Un Ninthai Maatsi Aayirrae, Mannar Unmeethi Aantaarae. 5. Unnil Ornaalil Aandavar Mannuyirsaabam Pokkinar; Oppartra Selvam Thammaiyae Oppitthu Meettaar Emmaiyae.