பாடல் #782
இயேசு கிறிஸ்துவின் நாமமிதே
🔤 Yesu Kiristhuvin Naamamithae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு கிறிஸ்துவின் நாமமிதே இனிமையாமே இன்பமதுவே ஏழைக்கும் ஆறுதலே 1. நாமம் அதிசயமே தேவதாசரின் புகலிடமே நானிலந்தனிலே யாவரும் வணங்கிடவே நாதன் இயேசுவின் நாமமதையே நன்றியுடன் புகழ்வோம் – இயேசு 2. அளிப்பேன் யாவுமே என் நாமத்தில் என்றனரே அழித்த வலியவனை வல்லமையுண்டதிலே களிப்போம் வல்ல நாமத்திலே கனிந்தே பாடிடுவோம் – இயேசு 3. நோய்கள் நீக்கிடவும் நவ பாஷைகள் பேசிடவும் சர்ப்பங்களை எடுக்க சக்தி ஈந்துதவும் உத்தமர்கள் போற்றிப் புகழும் கர்த்தரின் நாமமதே – இயேசு 4. சாவுக்கேதுவான கொடும் நஞ்சைப் பருகிடினும் சேதப்படுத்தாதே காக்க வல்லதுவே நாதன் ஈந்த தைலமெனவே நமக்காய் ஊற்றுண்டதே – இயேசு 5. பாவ இருள்தனை போக்கும் புண்ணிய நாமமதாய் பாரில் இறங்கினாரே தேவனின் அன்பதுவே இயேசு கிறிஸ்துவே நேசரிவரே ஆசைக்குகந்தவரே – இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Kiristhuvin Naamamithae Inimaiyaamae Inbamathuvae Aezhaikkum Aarudhalae 1. Naamam Athisayamae Thaevathaasarin Pugalidamae Naanilandhanilae Yaavarum Vanangkidavae Naadhan Yesuvin Naamamathaiyae Nanriyudan Pugazhvom – Yesu 2. Alippaen Yaavumae En Naamatthil Endranarae Azhittha Valiyavanai Vallamaiyundathilae Kalippom Valla Naamatthilae Kaninthae Paatituvom – Yesu 3. Noykal Neekkidavum Nava Paashaigal Paesidavum Sarppanggalai Etukka Sakthi Eenthudhavum Utthamarkal Porrip Pugazhum Karttharin Naamamathae – Yesu 4. Saavukkaethuvaana Kotum Nanjsaip Parukitinum Saedhappatutthaathae Kaakka Vallathuvae Naadhan Eendha Thailamenavae Namakkaay Oorrundathae – Yesu 5. Paava Irulthanai Pokkum Punniya Naamamathaay Paaril Irangkinaarae Devanin Anbathuvae Yesu Kiristhuvae Naesarivarae Aasaikkugandhavarae – Yesu