பாடல் #781
ஒரு போதும் உனை பிரியா
🔤 Oru Pothum Unai Piriyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு போதும் உனை பிரியா நிலையான உறவொன்று வேண்டும் என் உடல் கூட எறிந்தாலும் உம் நாமம் நான் சொல்ல வேண்டும் நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே நீங்காத நிழலாக வா இறைவா உன் கையில் என்னை நீ பொறித்தாய் பெயர் சொல்லி அன்பாய் எனை அழைத்தாய் -- (2) ஏன் என்னை நீ தெரிந்தாய் என் வாழ்வில் ஏன் நுழைந்தாய் உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன் தாய் உறவொன்று தேடும் பிள்ளை போல் நின்றேன் உம்மோடு நான் வாழுவேன் -- (ஒரு போதும்) நீர் தேடும் மான் போல தேடி வந்தேன் நீயின்றி வாழவில்லை என்றுணர்ந்தேன் -- (2) என்னுள்ளே வாழும் தெய்வம் என்னை நீ ஆளும் தெய்வம் என் இயேசு நீயே என் உள்ளம் நின்றாய் நிதம் என் பாதை முன்னே நீதானே சென்றாய் உம்மோடு நான் வாழுவேன் -- (ஒரு போதும்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Pothum Unai Piriyaa Nilaiyaana Uravonru Vaentum En Udal Kooda Erinthaalum Um Naamam Naan Solla Vaentum Ninaivilum Neeyae En Kanavilum Neeyae Neengkaadha Nizhalaaga Vaa Iraivaa Un Kaiyil Ennai Nee Poritthaay Peyar Solli Anpaay Enai Azhaitthaay -- (2) Aen Ennai Nee Therinthaay En Vaazhvil Aen Nuzhainthaay Un Maaraadha Anpil Makizhvonru Kantaen Thaay Uravonru Thaetum Pillai Pol Ninraen Ummotu Naan Vaazhuvaen -- (oru Pothum) Neer Thaetum Maan Pola Thaeti Vanthaen Neeyinri Vaazhavillai Enrunarnthaen -- (2) Ennullae Vaazhum Theyvam Ennai Nee Aalum Theyvam En Yesu Neeyae En Ullam Ninraay Nidham En Paathai Munnae Neethaanae Senraay Ummotu Naan Vaazhuvaen -- (oru Pothum)