பாடல் #78
அந்த நாள் பாக்கிய
🔤 Andha Naal Paakkiya
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அந்த நாள் பாக்கிய நாள் - நான் மீட்கப்பட்ட அந்த நாள் பாக்கிய நாள். அந்த நாள் ஆனந்த நாள், அருமை இரட்சகரென்னை அன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள். - அந்த 1.அன்றே எனக்குப் போதித்தார், - அவர் வழியில் அநுதினம் செல்லக் கற்பித்தார்; என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய ஏவினார் என் இரட்சகர், எங்கும் எடுத்துரைப்பேனே. - அந்த 2.என்றனை அன்றே இழுத்தார் - தமதன்பினால் இசைவாய்த் தம்முடன் இணைத்தார்; சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் எனக்கு, இந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன். - அந்த 3.ஆறுதல்களால் நிறைந்தேன், - அளவில்லாத ஆசிகளினால் மகிழ்ந்தேன்; தாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து மாறாத யேசுவினில் மகிமையாய்த் தங்கப் பெற்றேன். - அந்த 4.அந்நாளில் வாக்குப் பண்ணினேன், - உறுதியாக எந்நாளும் நான் புதிப்பிப்பேன்; சொன்ன இவ்வாக்கை நிதம், சுத்தமாய் நிறைவேற்ற உன்னத பலம் தாராய், என்னையாட்கொண்ட தேவா. - அந்த
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Andha Naal Paakkiya Naal - Naan Meetkappatta Andha Naal Paakkiya Naal. Andha Naal Aanandha Naal, Arumai Iratsakarennai Anpodazhaitthenathu Asutthanggal Neekkina Naal. - Andha 1.anrae Enakkup Pothitthaar, - Avar Vazhiyil Anuthinam Sellak Karpitthaar; Enrum Avarmael Saarnthae Inba Jeeviyam Seyya Aevinaar En Iratsakar, Engkum Etutthuraippaenae. - Andha 2.endranai Anrae Izhutthaar - Thamathanpinaal Isaivaayth Thammudan Inaitthaar; Sondham Naan Avarukkuch Sondham Avar Enakku, Indha Uruthibanni Iniya Aikkiyam Perraen. - Andha 3.aarudhalkalaal Nirainthaen, - Alavillaadha Aasigalinaal Makizhnthaen; Thaarumaaraana Ullam Maarudhalai Yatainthu Maaraadha Yaesuvinil Makimaiyaayth Thanggap Perraen. - Andha 4.annaalil Vaakkup Panninaen, - Uruthiyaaga Ennaalum Naan Puthippippaen; Sonna Ivvaakkai Nidham, Sutthamaay Niraivaertra Unnatha Palam Thaaraay, Ennaiyaatkonda Thaevaa. - Andha