பாடல் #7799
கர்த்தவை நம்புவாரை
🔤 Kartthavai Nampuvaarai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கர்த்தாவை நம்புவாரை ஒர்க்காலும் கைவிடார் பொல்லாரின் சீறுமாறை வீணாக்கிப் போடுவார்; சன்மார்க்கரைப் பலத்த கையால் தயாபரர் ரட்சித்துத் தாழ்ச்சியற்ற அன்பாய் விசாரிப்பார். 2. கர்த்தாவின் சித்தத்துக்குக் கீழ்ப்பட்டடங்குவேன்; அப்போ நான் ஜீவனுக்கு நேரே நடக்கிறேன். கெளகீக வாழ்வின் பாதை வேண்டாம். நான் இயேசுவைப் பின்பற்றி, இங்கே வாதை சகித்தலே மேன்மை. 3. என்மேலே பாரமாக வரும் இக்கட்டிலே பராபரன் அன்பாக என்னோடிருப்பாரே. பொறுக்கிற வரத்தை நான் அவரைக் கேட்பேன், இவ்வாறாயென் இக்கட்டைச் சகித்து வெல்லுவேன். 4. கசப்புங் கர்த்தராலே வரும், நான் பின் வாங்கேன், ஜெபத்தில் ஆசையாலே விண்ணப்பம் பண்ணுவேன்; அப்போது தயவாகக் காப்பாரே, கைவிடார்; இக்கட்டுப் பெரிதாகப் போம்போது தேற்றுவார். 5. அநேகர் ஆசைவைக்கும் திரவியத்துக்கு ஓடேன், அதென்றென்றைக்கும் நிலைத்து நிற்காது, என் பொக்கிஷம் பரத்தில் இருக்கும் கிறிஸ்துவே. அவரது வசத்தில் கதி எல்லாம் உண்டே. 6. என் இயேசுவை நான் பற்றி இருக்கிறேன், அவர் என் சாபத்தை அகற்றி விலக்கும் ரட்சகர் நான் தப்ப எனக்காக இரத்தம் சிந்தினார். அத்தன்மை உண்மையாக யார் என்னை நேசிப்பார். 7. தோத்திரமே செலுத்த மிகுந்த ஞாயமாம்; என், ஜீவனைக் கொடுத்த என் கர்த்தருக்கெல்லாம் ஆதீனமாவதாக; அவருக்கென்றைக்கும் பணிந்த பக்தியாக நான் கீழ்ப்படியவும். 8. என் ஏழைப் பாட்டித்தோடே முடியும்; இயேசுவே, அடியேனுக் கன்போடே மோட்சானந்தத்திலே சுதந்திரம் அளியும், அப்போ பிழைக்கிறேன், எல்லாவிதக் கதியும் அடைந்து வாழுவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kartthaavai Nampuvaarai Orkkaalum Kaivitaar Pollaarin Seerumaarai Veenaakkip Potuvaar; Sanmaarkkaraip Palattha Kaiyaal Thayaabarar Ratsitthuth Thaazhchsiyartra Anpaay Visaarippaar. 2. Kartthaavin Sitthatthukkuk Keezhppattatangkuvaen; Appo Naan Jeevanukku Naerae Natakkiraen. Kelakeega Vaazhvin Paathai Vaentaam. Naan Yesuvaip Pinbarri, Ingkae Vaathai Sakitthalae Maenmai. 3. Enmaelae Paaramaaga Varum Ikkattilae Paraabaran Anpaaga Ennotiruppaarae. Porukkira Varatthai Naan Avaraik Kaetpaen, Ivvaaraayen Ikkattaich Sakitthu Velluvaen. 4. Kasappung Karttharaalae Varum, Naan Pin Vaangkaen, Jebatthil Aasaiyaalae Vinnappam Pannuvaen; Appothu Thayavaagak Kaappaarae, Kaivitaar; Ikkattup Perithaagap Pompothu Thaerruvaar. 5. Anaegar Aasaivaikkum Thiraviyatthukku Otaen, Athenrenraikkum Nilaitthu Nirkaathu, En Pokkisham Paratthil Irukkum Kiristhuvae. Avarathu Vasatthil Kathi Ellaam Untae. 6. En Yesuvai Naan Parri Irukkiraen, Avar En Saabatthai Agarri Vilakkum Ratsakar Naan Thappa Enakkaaga Rattham Sinthinaar. Atthanmai Unmaiyaaga Yaar Ennai Naesippaar. 7. Thotthiramae Seluttha Mikundha Njaayamaam; En, Jeevanaik Kotuttha En Karttharukkellaam Aatheenamaavathaaga; Avarukkenraikkum Panindha Pakthiyaaga Naan Keezhppatiyavum. 8. En Aezhaip Paattitthotae Mutiyum; Yesuvae, Atiyaenuk Kanpotae Motsaanandhatthilae Sudhanthiram Aliyum, Appo Pizhaikkiraen, Ellaavidhak Kathiyum Atainthu Vaazhuvaen.