பாடல் #7794
கர்த்தாவே சின்னப்பிள்ளை நான்
🔤 Kartthaavae Sinnappillai Naan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கர்த்தாவே, சின்னப்பிள்ளை நான், என் பலம் கொஞ்சமே, ரட்சிப்படைய ஆசைதான் வகையறியேனே; வகையறியேனே. 2. எனக்கொப்பாய், என் மீட்பரே, ஓர் பிள்ளையாகி நீர் என் பாவம் சாவும் நீக்கவே இரத்தம் சிந்தினீர்; இரத்தம் சிந்தினீர். 3. இவ்வன்புக்காய் நான் நன்றியைச் செலுத்த உதவும் உமக்குப் ப்ரீதியானதை எனக்குக் கற்பியும்; எனக்குக் கற்பியும். 4. எனக்குண்டான யாவையும் நான் பலியாய்த் தந்தேன்; இரக்கமாய் என் நெஞ்சையும் நீர் ஏற்றுக்கொள்ளுமென்;: 5. உம்க்கு ஞானஸ்நானத்தில் நான் புத்திரன் ஆனேன், குழந்தையாக மோட்ச்சத்தில் சுதந்திரம் பெற்றேன்; சுதந்திரம் பெற்றேன். 6. நீர் என்னைச் சுத்தமாக்கினீர், பேய் என்னை மீளவும் தீண்டாப்படிக்குத் தேவரீர் சகாயமாயிரும்; சகாயமாயிரும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kartthaavae, Sinnappillai Naan, En Palam Konjjamae, Ratsippataiya Aasaithaan Vakaiyariyaenae; Vakaiyariyaenae. 2. Enakkoppaay, En Meetparae, Or Pillaiyaaki Neer En Paavam Saavum Neekkavae Rattham Sinthineer; Rattham Sinthineer. 3. Ivvanpukkaay Naan Nanriyaich Seluttha Udhavum Umakkup Preethiyaanathai Enakkuk Karpiyum; Enakkuk Karpiyum. 4. Enakkuntaana Yaavaiyum Naan Paliyaayth Thanthaen; Irakkamaay En Nenjsaiyum Neer Aerrukkollumen;: 5. Umkku Njaanasnaanatthil Naan Putthiran Aanaen, Kuzhanthaiyaaga Motcchatthil Sudhanthiram Perraen; Sudhanthiram Perraen. 6. Neer Ennaich Sutthamaakkineer, Paey Ennai Meelavum Theentaappatikkuth Thaevareer Sakaayamaayirum; Sakaayamaayirum.