பாடல் #7785
கர்த்தா நீர் வசிக்கும்
🔤 Kartthaa Neer Vasikkum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கர்த்தா, நீர் வசிக்கும் இடத்தை நேசிப்போம்; பாரின்பம் யாவிலும் உம் வீட்டை வாஞ்சிப்போம். 2. உம் ஜெப வீட்டினில் அடியார்கூட, நீர் பிரசன்னமாகியே உம் மந்தை வாழ்த்துவீர். 3. மெய் ஞானஸ்தானத்தின் ஸ்தானத்தை நேசிப்போம்; விண்புறாவாம் ஆவியால் பேரருள் பெறுவோம். 4. மா தூய பக்தியாம் உம்பீடம் நேசிப்போம்; விஸ்வாசத்தால் அதில் சமுகம் பணிவோம். 5. மெய் ஜீவனுள்ளதாம் உம் வார்த்தை நேசிப்போம், சந்தோஷம், ஆறுதல் அதில் கண்டடைவோம். 6. உம் அன்பின் பெருக்கை இங்கெண்ணிப் போற்றுவோம் விண் ஜெய கீதமோ எப்போது பாடுவோம்? 7. கர்த்தா, எம்முகத்தைக் கண்ணாரக் காணவே, உம்மை இப்பாரினில் நேசிக்க ஈவுமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kartthaa, Neer Vasikkum Idatthai Naesippom; Paarinbam Yaavilum Um Veettai Vaanjsippom. 2. Um Jeba Veettinil Atiyaarkooda, Neer Pirasannamaakiyae Um Manthai Vaazhtthuveer. 3. Mey Njaanasthaanatthin Sthaanatthai Naesippom; Vinpuraavaam Aaviyaal Paerarul Peruvom. 4. Maa Thooya Pakthiyaam Umpeedam Naesippom; Visvaasatthaal Athil Samugam Panivom. 5. Mey Jeevanullathaam Um Vaartthai Naesippom, Santhosham, Aarudhal Athil Kandataivom. 6. Um Anpin Perukkai Ingkennip Porruvom Vin Jeya Keedhamo Eppothu Paatuvom? 7. Kartthaa, Emmugatthaik Kannaarak Kaanavae, Ummai Ippaarinil Naesikka Eevumae.