பாடல் #7782
கர்த்தரைத் துதி என் ஆத்துமாவே
🔤 Karttharaith Thuthi En Aatthumaavae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கர்தரைத் துதி, என் ஆத்துமாவே, நான் சாகுமட்டும் போற்றுவேன் ஜீவனின் நாட்கள் எல்லாம், கர்த்தாவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். சரீரம் ஜீவன் தந்தவர் என்றும் துதிக்கப்பட்டவர். அல்லேலூயா. 2. அரசர் ஸ்த்ரீயினாலே பிறந்த நரர்தான் மண் ஆவார்களே அவர்கள் யோசனையோ இறந்த தினத்தில் வீணாய்ப் போகுமே; நரர் ஒத்தாசை விருதா, எங்கள் சகாயர் நீர் கர்த்தா அல்லேலூயா. 3. இயேசுவின் ஐக்கியத்தில் நிலை நின்று யாக்கோபின் தேவனைத் தானே தனக்கடைக்கலமாய்த் தெரிந்து கொண்டவன் மெய்ப்பாக்கியனே இக்கர்த்தர் பேரில் நம்பினோன், ஞானமும் பலமும் பெற்றோன், அல்லேலூயா. 4. பூமி சமுத்திரம் வானத்தையும் எவ்வாஸ்துவையும் சிஷ்டித்தார். வாக்குக் கொடுத்த எல்லாவற்றையும் மெய்யாக நிறைவேற்றுவார் எல்லாவற்றிற்கும் ஆண்டவர் நமக்கும் உண்மையுள்ளவர் அல்லேலூயா. 5. துன்பங்கள் அவநியாயத்தையும் சகிப்போரைத் தற்காக்கிறார். ஏழைகளின் பசி தாகத்தையும் குறைவில்லாமல் தீர்க்கிறார் கட்டுண்டோரை அவிழ்க்கிறார், பல இரக்கம் காட்டுவார். அல்லேலூயா. 6. குருடர்கள் கண்களைத் தாம் திறந்து செவிடர் கேட்கப் பண்ணுவார். பலமற்றோருக்குக் கையைத் தந்து எல்லாரையும் சிநேகிப்பார். திக்கற்ற பிள்ளை விதவை யாவர்க்கும் அவரே துணை அல்லேலூயா. 7. அக்ரமக்காரர் பின் வாங்குவார்கள், அவர்களைக் கவிழ்க்கிறார். சொந்த வலையில் சிக்குவார்கள், கர்த்தர் காலங்கடிக்கிறார், சியோனின் ராஜா தேவரீர் எங்களை என்றும் காக்கிறீர். அல்லேலூயா. 8. ஆண்டவர் அற்புதம் செய்வதற்குச் சமர்த்தர், அவர் என்றைக்கும் புகழுக்கேற்றவர் என்பதற்கு எல்லோரும் ஆமென் என்கவும். பிதா குமாரன் ஆவிக்கும் துதி புகழ் உண்டாகவும் அல்லேலூயா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kartharaith Thuthi, En Aatthumaavae, Naan Saakumattum Porruvaen Jeevanin Naatkal Ellaam, Kartthaavae Ummaip Pugazhnthu Paatuvaen. Sareeram Jeevan Thandhavar Enrum Thuthikkappattavar. Allaelooyaa. 2. Arasar Sthreeyinaalae Pirandha Nararthaan Man Aavaarkalae Avarkal Yosanaiyo Irandha Thinatthil Veenaayp Pokumae; Narar Otthaasai Viruthaa, Enggal Sakaayar Neer Kartthaa Allaelooyaa. 3. Yesuvin Aikkiyatthil Nilai Ninru Yaakkopin Devanaith Thaanae Thanakkataikkalamaayth Therinthu Kondavan Meyppaakkiyanae Ikkartthar Paeril Nampinon, Njaanamum Palamum Perron, Allaelooyaa. 4. Poomi Samutthiram Vaanatthaiyum Evvaasthuvaiyum Sishtitthaar. Vaakkuk Kotuttha Ellaavarraiyum Meyyaaga Niraivaerruvaar Ellaavarrirkum Aandavar Namakkum Unmaiyullavar Allaelooyaa. 5. Thunbanggal Avaniyaayatthaiyum Sakipporaith Tharkaakkiraar. Aezhaigalin Pasi Thaagatthaiyum Kuraivillaamal Theerkkiraar Kattuntorai Avizhkkiraar, Pala Irakkam Kaattuvaar. Allaelooyaa. 6. Kurudarkal Kankalaith Thaam Thiranthu Sevidar Kaetkap Pannuvaar. Palamarrorukkuk Kaiyaith Thanthu Ellaaraiyum Sinaekippaar. Thikkartra Pillai Vidhavai Yaavarkkum Avarae Thunai Allaelooyaa. 7. Akramakkaarar Pin Vaangkuvaarkal, Avarkalaik Kavizhkkiraar. Sondha Valaiyil Sikkuvaarkal, Kartthar Kaalanggatikkiraar, Siyonin Raajaa Thaevareer Enggalai Enrum Kaakkireer. Allaelooyaa. 8. Aandavar Arpudham Seyvatharkuch Samartthar, Avar Enraikkum Pugazhukkaertravar Enbatharku Ellorum Aamen Enkavum. Pithaa Kumaaran Aavikkum Thuthi Pugazh Untaagavum Allaelooyaa.