பாடல் #7757
என்னைத் தெய்வ சாயலான
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
1. என்னைத் தெய்வ சாயலான சிஷ்டியாக்கி,பின்பு நான் கெட்டபோதென் மீட்பரான கர்த்தரே, நீர் நேசந்தான் நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும். 2. என்னை முன்னமே தெரிந்து காலம் நிறைவேறின போதென் ரூபையே அணிந்து நர ஜென்மமாகிய நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும். 3. எனக்காகப் பாடுபட்டு, நிந்தையுள்ளதாகிய சாவால் பரமண்டலத்துப் பாக்கியத்தைத் தேடின நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும். 4. என்ன்கொளியும் வழியும் சத்தியமும் நித்திய ஜீவனும் பரகதியும் சகலமுமாகிய நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும். 5. என் துர்ச்சிந்தையை அறுத்து, என்னை வென்று சீர்கெட்ட என் உள்ள்ளத்தையும் இழுத்து, பரவசமாக்கின நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும். 6. என்றும் என்னை உண்மையாகத் தேடி, தந்தை திவ்விய பாசித்தில் எனக்காக வேண்டிக் கொண்டிருக்கிற நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும். 7. என்னை மண்குழியைவிட்டு வரச்சொல்லி, பரம ஜோதியால் அலங்கரித்துச் சேர்க்கச் சித்தமாகிய நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும்.