பாடல் #7754
எனது ஆத்துமமே விழி உட்கருத்தாக
🔤 Enathu Aatthumamae Vizhi Utkarutthaaga
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. எனது ஆத்துமமே, விழி உட்கருத்தாக மகிமையுள்ள கர்த்தாவைப் புகழுவாயாக. கீதங்களே, என் சுரமண்டலமே. போற்ற விழிப்பீர்களாக. 2. கர்த்தரைப் போற்று, வினோதமாய் உன்னைச் சிஷ்டித்தார்; மெத்த அதிசய மீட்பினால் உன்னை ரட்சித்தார்; உன்னைத் தாமே தமது கைகளிலே ஏத்தி அனுக்கிரகித்தார். 3. கர்த்தரைப் போற்று, அனைத்தையுஞ் சீருக்கமைத்தார் உன்னைக் காப்பாற்றிச் சுகத்தைத் தந்தரவனைத்தார்; மோசத்திலே: செட்டைகளால் அவரே உன்னை எப்போதும் மறைத்தார். 4. கர்த்தரைப் போற்று, அன்பாய் உன்னை ஆசீர்வதித்தார், நேச வாய்க்கால்களைப் பாய்ச்சி உன்மேல் வரவிட்டார்; கர்த்தரின் கை வல்லது என்று நினை, தயவாய் உன்னைச் சந்தித்தார். 5. கர்த்தரைப் போற்று, என் உள்ளமே, ஜாக்ரதையாக, சகல சிஷ்டியும் அவரைப் போற்றுவதாக. ஆத்துமமே, உன் உபகாரியையே போற்ற மரந்திராயாக.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Enathu Aatthumamae, Vizhi Utkarutthaaga Makimaiyulla Kartthaavaip Pugazhuvaayaaga. Keedhanggalae, En Suramandalamae. Portra Vizhippeerkalaaga. 2. Karttharaip Porru, Vinodhamaay Unnaich Sishtitthaar; Mettha Athisaya Meetpinaal Unnai Ratsitthaar; Unnaith Thaamae Thamathu Kaigalilae Aetthi Anukkirakitthaar. 3. Karttharaip Porru, Anaitthaiyunj Seerukkamaitthaar Unnaik Kaappaarrich Sugatthaith Thandharavanaitthaar; Mosatthilae: Settaigalaal Avarae Unnai Eppothum Maraitthaar. 4. Karttharaip Porru, Anpaay Unnai Aaseervathitthaar, Naesa Vaaykkaalkalaip Paaychsi Unmael Varavittaar; Karttharin Kai Vallathu Enru Ninai, Thayavaay Unnaich Santhitthaar. 5. Karttharaip Porru, En Ullamae, Jaakrathaiyaaga, Sakala Sishtiyum Avaraip Porruvathaaga. Aatthumamae, Un Ubakaariyaiyae Portra Maranthiraayaaga.