பாடல் #7751
என் மீட்பராண இயேசுவே
🔤 En Meetparaana Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் மீட்பரான இயேசுவே, நீர் ஆச்சரியமாகப் பரத்துக்கேறினதற்கே துதி உண்டாவதாக. சபையின் சிரசான நீர் உம்மண்டை என்னைனயுஞ்சேர்ப்பீர் மகா இரக்கத்தாலே. 2. என் பொக்கிஷம் பரத்துக்கே போய் ஏறினாதினாலே அடியேனும் அவ்விடமே என் நெஞ்சின் வாஞ்சையாலே எழும்பிட ஏங்குகின்றேன், இவ்வுலகை வெறுக்கின்றேன்; இதில் மெய் ஓய்விராது. 3. கர்த்தா, அடியேன் ஜெபத்தைக் கேட்டருளுவீராக; என் அற்ப விசுவாசத்தைப் பலக்கச் செய்வீராக; நான் மாளும்போதென் பயத்தை அன்பாக நீக்கிமோட்சத்தைத் தந்தென்னைச் சேர்த்துக் கொள்ளும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Meetparaana Yesuvae, Neer Aacchariyamaagap Paratthukkaerinatharkae Thuthi Untaavathaaga. Sapaiyin Sirasaana Neer Ummantai Ennainayunjsaerppeer Makaa Irakkatthaalae. 2. En Pokkisham Paratthukkae Poy Aerinaathinaalae Atiyaenum Avvidamae En Nenjsin Vaanjsaiyaalae Ezhumpida Aengkukinraen, Ivvulakai Verukkinraen; Ithil Mey Oyviraathu. 3. Kartthaa, Atiyaen Jebatthaik Kaettaruluveeraaga; En Arpa Visuvaasatthaip Palakkach Seyveeraaga; Naan Maalumpothen Payatthai Anpaaga Neekkimotsatthaith Thanthennaich Saertthuk Kollum.