பாடல் #7734
என் ஜீவன் கிறிஸ்துதாமே
🔤 En Jeevan Kiristhuthaamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் ஜீவன் கிறிஸ்துதாமே, அத்தாலே எனக்கு என் சாவாதாயமாமே. நெஞ்சே, மகிழ்ந்திரு. 2. நான் இயேசு வசமாக சேர்ந்தென்றும் வாழவே, மகா மகிழ்ச்சியாகப் பிரிந்து போவேனே. 3. பாடற்றுபோம், இந்நாளே என் நோவின் முடிவு, என் பாவம் இயேசுவாலே நிவர்த்தியாயிற்று. 4. நான் பேச்சு மூச்சில்லாமல் குளிர்ந்து போகவே என் ஆசையைத் தள்ளாமல் கண்ணோக்கும், கர்த்தரே. 5. ஓர் விளக்கின் கொழுந்து அவியும் போல் என்னில் வினா வெல்லாம் அறுந்து கலைந்து போகையில். 6. அப்போது நன்றாய் அமைந்து கலங்கலின்றியே நான் நித்திரை அடைந்து தூங்கட்டும் இயேசுவே. 7. நான் உம்மைக் கெட்டியாகப் பிடித்தும்முடனே அனந்தப் பூரிப்பாக வாழட்டும், இயேசுவே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Jeevan Kiristhuthaamae, Atthaalae Enakku En Saavaathaayamaamae. Nenjsae, Makizhnthiru. 2. Naan Yesu Vasamaaga Saernthenrum Vaazhavae, Makaa Makizhchsiyaagap Pirinthu Povaenae. 3. Paadarrupom, Innaalae En Novin Mutivu, En Paavam Yesuvaalae Nivartthiyaayirru. 4. Naan Paechsu Moochsillaamal Kulirnthu Pogavae En Aasaiyaith Thallaamal Kannokkum, Karttharae. 5. Or Vilakkin Kozhunthu Aviyum Pol Ennil Vinaa Vellaam Arunthu Kalainthu Pokaiyil. 6. Appothu Nanraay Amainthu Kalanggalinriyae Naan Nitthirai Atainthu Thoonggattum Yesuvae. 7. Naan Ummaik Kettiyaagap Pititthummudanae Anandhap Poorippaaga Vaazhattum, Yesuvae.