பாடல் #7720
எருசலேம் எருசலேம்
🔤 Erusalaem Erusalaem
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. எருசலேம், எருசலேம் உயர்ந்த நகரே, கர்த்தாவின் வாசஸ்தானமே, பூலோக மோட்சமே, நீ பாழடைந்தபடியால் விசாரமாகிறோம்; உன்னை நினைக்கும்போதெல்லாம் கண்ணீர் விடுகிறோம். 2. முன்னால் உன் மக்கள் கர்த்தரைச் சீயோனில் பாடினார் இப்போ பயந்தொடுக்கமாய்ப் புலம்பி நிற்கிறார்; உன் மேன்மையாவும் போயிற்று, உன் தாழ்வு யாவையும், கண்டெங்கள் கண் கலங்கிப்போய், கண்ணீரைச் சொரியும். 3. எருசலேம், எருசலேம், மனந்திரும்பாயோ, நீ கொன்ற ஆட்டுக்குட்டியை அங்கிகரிக்காயோ, நீ இயேசுவை உன் மேசியாஎன்றண்டுமளவும் எக்காலும் எங்கள் மனது வியாகூலப்படும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Erusalaem, Erusalaem Uyarndha Nakarae, Kartthaavin Vaasasthaanamae, Poologa Motsamae, Nee Paazhataindhapatiyaal Visaaramaakirom; Unnai Ninaikkumpothellaam Kanneer Vitukirom. 2. Munnaal Un Makkal Karttharaich Seeyonil Paatinaar Ippo Payanthotukkamaayp Pulampi Nirkiraar; Un Maenmaiyaavum Poyirru, Un Thaazhvu Yaavaiyum, Kantenggal Kan Kalangkippoy, Kanneeraich Soriyum. 3. Erusalaem, Erusalaem, Mananthirumpaayo, Nee Kondra Aattukkuttiyai Angkigarikkaayo, Nee Yesuvai Un Maesiyaaendrantumalavum Ekkaalum Enggal Manathu Viyaakoolappatum.