பாடல் #7711
உம்மை ராஜா விசுவாச
🔤 Ummai Raajaa Visuvaasa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. உம்மை ராஜா விசுவாச பக்தியாய்ப் பணிகிறேன் தாழ்மையோடும் கண்ணீரோடும் தேவரீரை அண்டினேன் நீர் மண்ணான பாண்டமான என்னை அன்பாய்ப் பாருமேன். 2. என்னைச் சுத்த சீர்ப்படுத்த அருள் செய்யும், கர்த்தரே; என்னைச் சொந்த ஆடாய்க் கொண்ட மேய்ப்பரான உம்மையே சேர்வேனாக, நீர் அன்பாக என்னைப் பாரும், இயேசுவே. 3. தயவோடே நீர் உம்மோடே ஐக்கியமாம் எல்லாருக்கும் ஈவதான இன்பமான அருள் என்மேல் வரவும்; யாவும் நீரே, தேவரீரே என்னைப் பார்த்து ரட்சியும். 4. ஆ, என் ஞானப் பொழுதான தெய்வ ஆட்டுக்குட்டியே எனதாவி உம்மைத் தாவி தேடும், மணவாளனே; பட்சத்தோடும் தயவோடும் என்னைப் பாரும், மீட்பரே. 5. ஏங்கலோடும் பணிவோடும் என்னுடைய ஆத்துமம், வாயும் நெஞ்சும் கூவிக் கெஞ்சும் சத்தம் கேட்டென் சஞ்சலம் தீர்ப்பீராக; நீர் அன்பாக என்னைப் பார்த்தால் பாக்கியம். 6. உலகத்துப் பொய்ச் சம்பத்து மாயையும் சிங்காரமும் ஆன நல்ல செல்வம் அல்ல, நெஞ்சை அவை வாதிக்கும்; மெய் வாழ்வான நீர் அன்பான பார்வை தந்து ரட்சியும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Ummai Raajaa Visuvaasa Pakthiyaayp Panikiraen Thaazhmaiyotum Kanneerotum Thaevareerai Antinaen Neer Mannaana Paandamaana Ennai Anpaayp Paarumaen. 2. Ennaich Suttha Seerppatuttha Arul Seyyum, Karttharae; Ennaich Sondha Aataayk Konda Maeypparaana Ummaiyae Saervaenaaga, Neer Anpaaga Ennaip Paarum, Yesuvae. 3. Thayavotae Neer Ummotae Aikkiyamaam Ellaarukkum Eevathaana Inbamaana Arul Enmael Varavum; Yaavum Neerae, Thaevareerae Ennaip Paartthu Ratsiyum. 4. Aa, En Njaanap Pozhuthaana Theyva Aattukkuttiyae Enathaavi Ummaith Thaavi Thaetum, Manavaalanae; Patsatthotum Thayavotum Ennaip Paarum, Meetparae. 5. Aenggalotum Panivotum Ennutaiya Aatthumam, Vaayum Nenjsum Koovik Kenjsum Sattham Kaetten Sanjjalam Theerppeeraaga; Neer Anpaaga Ennaip Paartthaal Paakkiyam. 6. Ulakatthup Poych Sambatthu Maayaiyum Singkaaramum Aana Nalla Selvam Alla, Nenjsai Avai Vaathikkum; Mey Vaazhvaana Neer Anpaana Paarvai Thanthu Ratsiyum.