பாடல் #7708
உத்தம தீர்க்கதரிசி அன்பாக
🔤 Utthama Theerkkatharisi Anpaaga
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. உத்தம தீர்க்கதரிசி, அன்பாக பரம கல்வியைக் கற்றுக் கொடும்; பாவியை நேசிக்கும் போதகராக வந்த நீர் என்னையுஞ் சேர்த்தருளும். சர்ப்பத் தலையை உடைத்த நீர்தாமே பாவிக்கு உத்தம போதகராமே. 2. என் பிரதான ஆசாரியராக உம்மைப் பணிந்து தியானிக்கிறேன். நித்திய மீட்பரே, நீர் எனக்காக மாண்டதால் நீதிமானாக்கப்பட்டேன்; வானத்திலே நீர் என் காரிய கர்த்தர், என்றைக்கும் என்னை நீர் காக்கச் சமர்த்தர். 3. உன்னத அரசே; உம்மைத் துதித்து, கீதங்களாலும் புகழுகிறோம், உம்மைச் சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்து, உமது குகைளாயிருப்போம். உமது ஜனத்தைச் சகல நாளும் காத்து விசாரித்து ராஜியம் ஆளும். 4. என் முழு உள்ளமும் உம்மைக் கொண்டாடும், உமது நேசத்தைப் போற்றுகிறேன்; எனது நாவும் நீர் செய்ததைப் பாடும், நானும் அல்லேலூயா, ஆமேன் என்பேன். ஜீவனுடையதெல்லாம் பணிவாக ஜீவனின் கர்த்தரைப் போற்றுவதாக.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Utthama Theerkkatharisi, Anpaaga Parama Kalviyaik Karruk Kotum; Paaviyai Naesikkum Podhakaraaga Vandha Neer Ennaiyunj Saerttharulum. Sarppath Thalaiyai Utaittha Neerthaamae Paavikku Utthama Podhakaraamae. 2. En Pirathaana Aasaariyaraaga Ummaip Paninthu Thiyaanikkiraen. Nitthiya Meetparae, Neer Enakkaaga Maandathaal Neethimaanaakkappattaen; Vaanatthilae Neer En Kaariya Kartthar, Enraikkum Ennai Neer Kaakkach Samartthar. 3. Unnatha Arasae; Ummaith Thuthitthu, Keedhanggalaalum Pugazhukirom, Ummaich Saashtaanggamaay Namaskaritthu, Umathu Kukailaayiruppom. Umathu Janatthaich Sakala Naalum Kaatthu Visaaritthu Raajiyam Aalum. 4. En Muzhu Ullamum Ummaik Kontaatum, Umathu Naesatthaip Porrukiraen; Enathu Naavum Neer Seythathaip Paatum, Naanum Allaelooyaa, Aamaen Enpaen. Jeevanutaiyathellaam Panivaaga Jeevanin Karttharaip Porruvathaaga.