பாடல் #7704
இவ்வேழைக்காகப் பலியான
🔤 Ivvaezhaikkaagap Paliyaana
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இவ்வேழைக்காகப் பலியான என் இயேசுவினது தயை; நான் என்றும் நிற்கத்தக்கதான உறுதியான கன்மலை; விண்மண் ஒழிந்தும், இதுவே அசைவில்லமல் நிற்குமே. 2. அவர் தயை என்றைக்கும் நிற்கும் அதளவற்றிருக்குமே. அவர் கை நரரை ரட்சிக்கும் படிக்கு நீட்டப்பட்டதே; வராதே போனால், அவர்க்கு மா அங்கலாய்ப்பிருக்குது. 3. ரட்சிக்கப்படுவதற்காக இரக்கமாய்த் தயாபரர் நரரின் மனத்தை நன்றாகத் தட்டிக்கொண்டே யிருப்பவர்; அதேனென்றால் இரட்சகர் அனைவரையும் மீட்டவர். 4. அவர் அனைவருக்கமாக மீட்கும் பொருளைத் தந்தாரே, குணப்படும் எல்லார்க்குமாகப் பாவமன்னிப்புண்டாகுமே; ஆ, இயேசுவால் உண்டானது அளவில்லாத தயவு. 5. ஆ, அவருக்குப் பத்தியாக நான் என்னை ஒப்புவிக்கிறேன்; திகில் என் பாவங்களுக்காக வந்தால், அவரை நோக்குவோன்; அப்போதவர் என் பேரிலே இரக்கமாய்க் கண் வைப்பாரே. 6. வேறாறுதல் எல்லாம் போனாலும் வேறெதுவும் என் ஆவிக்குக் குளிர்ச்சியைக் கொடாவிட்டாலும், நான் அவரிடம் சேர்வது என் நோவை முற்றும் ஆற்றுமே இரக்கம் அவரில் உண்டே 7. இம்மண்ணில் தொந்தரையினாலும் நான் மெத்தவாதிக்கப்பட்டால், தினம் பல வருத்தத்தாலும் என் பாரம் மிகுதியானால், என் இயேசுவின் இரக்கமே என் ஆத்துமத்தைத்தேற்றுமே 8. நான் எந்த நன்மையைச்சேய்தாலும், அதில் என் பலவீனத்தை நான் கண்டுணருவதினாலும் நான் ஏங்கும்போதென் மனத்தை என் இயேசுவின் இரக்கமே திரும்பத் தேற்றிக்கொள்ளுமே 9. ஆ, இத்தனை இரக்கமுள்ள என் இயேசுவுக்கனைத்தையும் நான் ஒப்புவிப்பேன்; தயவுள்ள அவர் என்னை விசாரிக்கும் அவரது இரக்கமே இக்கட்டை எல்லாம் நீக்குமே 10. நான் உயிரோடிருக்குமட்டும் நீர், கர்த்தரே, என் நம்பிக்கை; என் விசுவாசம் உம்மைப் பற்றும், இதே என் பிரதிக்கனை, என் தடைக்கலம் நீரே, இரக்கமுள்ள இயேசுவே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Ivvaezhaikkaagap Paliyaana En Yesuvinathu Thayai; Naan Enrum Nirkatthakkathaana Uruthiyaana Kanmalai; Vinman Ozhinthum, Ithuvae Asaivillamal Nirkumae. 2. Avar Thayai Enraikkum Nirkum Adhalavarrirukkumae. Avar Kai Nararai Ratsikkum Patikku Neettappattathae; Varaathae Ponaal, Avarkku Maa Anggalaayppirukkuthu. 3. Ratsikkappatuvatharkaaga Irakkamaayth Thayaabarar Nararin Manatthai Nanraagath Thattikkontae Yiruppavar; Athaenenraal Iratsakar Anaivaraiyum Meettavar. 4. Avar Anaivarukkamaaga Meetkum Porulaith Thanthaarae, Kunappatum Ellaarkkumaagap Paavamannippuntaakumae; Aa, Yesuvaal Untaanathu Alavillaadha Thayavu. 5. Aa, Avarukkup Patthiyaaga Naan Ennai Oppuvikkiraen; Thikil En Paavanggalukkaaga Vanthaal, Avarai Nokkuvon; Appodhavar En Paerilae Irakkamaayk Kan Vaippaarae. 6. Vaeraarudhal Ellaam Ponaalum Vaerethuvum En Aavikkuk Kulirchsiyaik Kotaavittaalum, Naan Avaridam Saervathu En Novai Murrum Aarrumae Irakkam Avaril Untae 7. Immannil Thondharaiyinaalum Naan Metthavaathikkappattaal, Thinam Pala Varutthatthaalum En Paaram Mikuthiyaanaal, En Yesuvin Irakkamae En Aatthumatthaitthaerrumae 8. Naan Endha Nanmaiyaichsaeythaalum, Athil En Palaveenatthai Naan Kantunaruvathinaalum Naan Aengkumpothen Manatthai En Yesuvin Irakkamae Thirumbath Thaerrikkollumae 9. Aa, Itthanai Irakkamulla En Yesuvukkanaitthaiyum Naan Oppuvippaen; Thayavulla Avar Ennai Visaarikkum Avarathu Irakkamae Ikkattai Ellaam Neekkumae 10. Naan Uyirotirukkumattum Neer, Karttharae, En Nampikkai; En Visuvaasam Ummaip Parrum, Ithae En Pirathikkanai, En Thataikkalam Neerae, Irakkamulla Yesuvae.