பாடல் #7703
இவ்வுயர் மலைமீதினில்
🔤 Ivvuyar Malaimeethinil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இவ்வுயர் மலைமீதினில் எம் நாதா, உந்தன் பாத்த்தில் எம்பாவக்கண்ணால் காண்கிறோம் உம் தாசர் பூர்வ பக்தராம், சீனாய் மலைமேல் கட்டளை வானோரால் பெற்றமோசேயை தீ, காற்று, கம்பம் கண்டோனை மா மென்மை சத்தம் கேட்டோனை. 2. இவ்வுயர் மாலைமிதிலே எம் நாதர் சீஷர் மூவரே; கற்பாறை போன்ற பேதுரு நிற்பான் எப்பாவம் எதிர்த்து; இடி முழங்க மக்களாம்; கடிந்த பேச்சு யாக்கோபாம்; "அன்பே கடவுள்" போதிப்பான் உன்னத ஞானியாம் யோவான். 3. இவ்வுயர் மலைமீதிலும் உயர்ந்து உள்ளம் பொங்கிடும், பரமன் ஜோதி தோன்றிடும், பகலோன் ஜோதிமாய்த்திடும்; மா தூய ஆடை வெண்மையே ஆ, மாந்தர் காணாவிந்தையே நான் மேலும் மேலும் ஏறியே நம் நாதர் ரூபம்கான்போமே. 4. இவ்வுயர் மலை மீதினில் எம் நாதர் தூய பாதத்தில் மா இருள் மேகம் மூடினும் மா ஜோதிபார்வைவாட்டினும் காண்போமே தெய்வமைந்தனை கேட்போமே தெய்வ வார்த்தையை, "இவர் என்நேச மைந்தனார்! இவர்க்குச் செவி கொடுப்பீர்".
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Ivvuyar Malaimeethinil Em Naathaa, Undhan Paatththil Empaavakkannaal Kaankirom Um Thaasar Poorva Paktharaam, Seenaay Malaimael Kattalai Vaanoraal Pertramosaeyai Thee, Kaarru, Kambam Kantonai Maa Menmai Sattham Kaettonai. 2. Ivvuyar Maalaimithilae Em Naadhar Seeshar Moovarae; Karpaarai Pondra Paethuru Nirpaan Eppaavam Ethirtthu; Iti Muzhangga Makkalaam; Katindha Paechsu Yaakkopaam; "anpae Katavul" Pothippaan Unnatha Njaaniyaam Yovaan. 3. Ivvuyar Malaimeethilum Uyarnthu Ullam Pongkitum, Paraman Jothi Thonritum, Pakalon Jothimaaytthitum; Maa Thooya Aatai Venmaiyae Aa, Maandhar Kaanaavinthaiyae Naan Maelum Maelum Aeriyae Nam Naadhar Roobamkaanpomae. 4. Ivvuyar Malai Meethinil Em Naadhar Thooya Paadhatthil Maa Irul Maegam Mootinum Maa Jothipaarvaivaattinum Kaanpomae Theyvamaindhanai Kaetpomae Theyva Vaartthaiyai, "ivar Ennaesa Maindhanaar! Ivarkkuch Sevi Kotuppeer".