பாடல் #7694
இயேசுவே வானத்தை விட்டிங்கே
🔤 Yesuvae Vaanatthai Vittingkae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இயேசுவே, வானத்தை விட்டிங்கே வருகிறீரோ, விண்ணுடன் மண்ணை நீர் ஒப்புரவாக்கத் தாழ்ந்தீரோ, ஆண்டவரே- என்னை நீர் மீட்பதற்கே மனிதப் பிறப்பானீரோ. 2. ஆதித் தகப்பனால் போனதனைத்தையும் நீரே உமது மீட்பினால் எனக்குத் தேடிவைப்பீரே. எனக்குண்டாம்- நோவும் இக்கட்டுமெல்லாம் தீர, நீர் உற்பவித்தீரே. 3. என்னைப் பிசாசு பிடித்துக் கெடுக்க விரும்பும் மரணம், நரகம் என்னை விழுங்க எழும்பும். மீட்பரே, நீர்- வந்த்தால் எனது சீர் பாக்கியமாகத் திரும்பும். 4. இயேசுவே, எனக்குள் நல்லகுணத்தை உண்டாக்கும்; ஆவியை, தேகத்தை உம்து ரூபுக்கொப்பாக்கும். உம்மை மகா- பக்தியாய்ப் போற்றிவர என்னை எச்சரிக்கை செய்யும். 5. என்னையும் நீர் விசுவாசிகளுக்குக் கொடுக்கும் நித்திய ஜீவனின் வாழ்வுக்கும் ஆனந்தத்துக்கும் கொண்டு போமேன்- என்று மன்றாடுகின்றேன். அங்கே என் மனமிருக்கும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yesuvae, Vaanatthai Vittingkae Varukireero, Vinnudan Mannai Neer Oppuravaakkath Thaazhntheero, Aandavarae- Ennai Neer Meetpatharkae Manidhap Pirappaaneero. 2. Aathith Thakappanaal Ponathanaitthaiyum Neerae Umathu Meetpinaal Enakkuth Thaetivaippeerae. Enakkuntaam- Novum Ikkattumellaam Theera, Neer Urpavittheerae. 3. Ennaip Pisaasu Pititthuk Ketukka Virumpum Maranam, Narakam Ennai Vizhungga Ezhumpum. Meetparae, Neer- Vantthaal Enathu Seer Paakkiyamaagath Thirumpum. 4. Yesuvae, Enakkul Nallakunatthai Untaakkum; Aaviyai, Thaegatthai Umthu Roopukkoppaakkum. Ummai Makaa- Pakthiyaayp Porrivara Ennai Eccharikkai Seyyum. 5. Ennaiyum Neer Visuvaasigalukkuk Kotukkum Nitthiya Jeevanin Vaazhvukkum Aanandhatthukkum Kontu Pomaen- Enru Manraatukinraen. Angkae En Manamirukkum.