பாடல் #7691
இயேசுவே நீர் தாழ்ந்தோரான
🔤 Yesuvae Neer Thaazhnthoraana
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இயேசுவே, நீர் தாழ்ந்தோரான நாட்களில் கும்போடே நீர், “என்னால் நோயைத் தீர்ப்பதான சக்தி பாய்கிற” தென்றீர். இப்போதுன்னதத்தில் ஆளும் ராஜாவான நீர் இந்நாள் உம் சக்தியை என் பேரிலும் பாயப் பண்ணியருளும். 2. உமக்கதிகாரம் யாவும் தரப்பட்டு விட்டதே. தேவரீரை எந்த நாவும் கர்த்தர் என்க வேண்டுமே, யாவிம் உமக்குப் படியும். பெருமை எல்லாம் அழியும், உம்மால் இறுதியிலே சாவு வெல்லப்படுமே. 3. ஆகையாலே தேவயான மீட்பெப்போதும் உம்மாலோம்; இதற்கு நீர் செய்ததான அற்புதங்கள் சாட்சியாம், ஏனென்றால் அவரவர்க்கு அனுகூலராவதற்கு மனிதரிடத்திலே தயவாக வந்தீரே. 4. ஆ, இவ்வேழைக்கும் இரங்கும் தெய்வ பரிகாரியே, என்னைப் பாரும், என்னில் எங்கும் பண்ணும் ரோகமும் உண்டே பாவமும் பொல்லா வினையும் நீங்க என்மேல்கையைவையும், சுகமாகென் றெனக்கும் நீர் அன்பாகச் சொல்லவும். 5. உம்முடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொடுகிறேன், நீர் ரட்சிக்கிற பலத்தின் சத்துவத்தை நம்புவேன்; நீர் உரைத்ததைப் பிடிப்பேன். உமக்கென்னை ஒப்புவிப்பேன்; மீட்டுக்கொள்ளும், இயேசுவே. 6. ஆமென், என் ஜெபத்தைக்கேட்பீர் என்னைச்சுத்தம் செய்குவீர். என்னை நோக்கி என்னைச்சேர்ப்பீர், தேற்றி அன்பைக் காண்பிப்பீர். அத்தால் நித்த நித்தமாக உமக்குப் புகழ்ச்சியாகத் தோத்திரஞ் செலுத்துவேன், ஆமேன், ஆமேன் என்கிறேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yesuvae, Neer Thaazhnthoraana Naatkalil Kumpotae Neer, “ennaal Noyaith Theerppathaana Sakthi Paaykira” Thenreer. Ippothunnathatthil Aalum Raajaavaana Neer Innaal Um Sakthiyai En Paerilum Paayap Panniyarulum. 2. Umakkathikaaram Yaavum Tharappattu Vittathae. Thaevareerai Endha Naavum Kartthar Enka Vaentumae, Yaavim Umakkup Patiyum. Perumai Ellaam Azhiyum, Ummaal Iruthiyilae Saavu Vellappatumae. 3. Aakaiyaalae Thaevayaana Meetpeppothum Ummaalom; Idharku Neer Seythathaana Arpudhanggal Saatsiyaam, Aenenraal Avaravarkku Anukoolaraavatharku Manidharidatthilae Thayavaaga Vantheerae. 4. Aa, Ivvaezhaikkum Irangkum Theyva Parikaariyae, Ennaip Paarum, Ennil Engkum Pannum Rogamum Untae Paavamum Pollaa Vinaiyum Neengga Enmaelkaiyaivaiyum, Sugamaaken Renakkum Neer Anpaagach Sollavum. 5. Ummutaiya Vasthiratthin Oratthaith Thotukiraen, Neer Ratsikkira Palatthin Satthuvatthai Nampuvaen; Neer Uraitthathaip Pitippaen. Umakkennai Oppuvippaen; Meettukkollum, Yesuvae. 6. Aamen, En Jebatthaikkaetpeer Ennaichsuttham Seykuveer. Ennai Nokki Ennaichsaerppeer, Thaerri Anpaik Kaanpippeer. Atthaal Nittha Nitthamaaga Umakkup Pugazhchsiyaagath Thotthiranj Selutthuvaen, Aamaen, Aamaen Enkiraen.