பாடல் #7689
இயேசுவே நீர் தாமே
🔤 Yesuvae Neer Thaamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இயேசுவே, நீர்தாமே என் மகிழ்ச்சியாமே நீர் என் பூரிப்பு; என் மனம் நாள்தோறும் ஆசை வாஞ்சையோடும் ஏங்குகின்றது. கர்த்தரே, உலகிலே உம்மை யன்றி வாழ்விராது, இன்பமுங் காணாது. 2. நல் மறைவின் கீழே நான் ஒதுங்க, நீரே என் அரண்மனை; சாத்தான் வர்மிக்கட்டும், எதிரி சீறட்டும், இயேசு என் துணை. திகிலும் பயங்களும் பாவ நரகக்கெடியும் இயேசுவால் தணியும். 3. வலு சர்ப்பத்துக்கும் சாவின் பற்களுக்கும் நான் திடுக்கிடேன். லோகமே, விரோதி; நான் சங்கீதம் ஓதி தோத்திரிக்கிறேன். தெய்வக்கை என் சலுகை; இனி, சாத்தான் கூட்டத்தார்கள் மௌனம் அடைவார்கள். 4. பொக்கிஷங்கள் யாவும் வீணும் விருதாவும்; இயேசு என் கதி லோகத்தார் இச்சிக்கும் வாழ்வோர் குமிழிக்கும் கானற்குஞ்சரி, அதை ஏன் தொடருவேன், இயேசுவோடடைந்த தாழ்வு பெரிதான வாழ்வு. 5. லோகத்தின் மினுக்கே, நீ மகா அழுக்கே. என்னைவிட்டுப் போ; பாவங்களுடைய தீழ்ப்பே, நீ மறைய வேளையாம்; இதோ இச்சையே, துன்மார்க்கமே, நீ எல்லாஞ் சமூலமாக அற்றுப் போவாயாக. 6. மனமே, நீ ஆறு, பூரிப்பாகப் பாடு. இயேசு சேர்ந்தாரே; அத்தால் எந்தப் பாடும் தித்திப்பாக மாறும். நான் உலகிலே நிந்தையும் நிஷ்டூரமும் உத்தரித்தும், இயேசுதாவே என் மகிழ்ச்சியாமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yesuvae, Neerthaamae En Makizhchsiyaamae Neer En Poorippu; En Manam Naalthorum Aasai Vaanjsaiyotum Aengkukindrathu. Karttharae, Ulakilae Ummai Yanri Vaazhviraathu, Inbamung Kaanaathu. 2. Nal Maraivin Keezhae Naan Othungga, Neerae En Aranmanai; Saatthaan Varmikkattum, Ethiri Seerattum, Yesu En Thunai. Thikilum Payanggalum Paava Narakakketiyum Yesuvaal Thaniyum. 3. Valu Sarppatthukkum Saavin Parkalukkum Naan Thitukkitaen. Logamae, Virothi; Naan Sangkeedham Othi Thotthirikkiraen. Theyvakkai En Salukai; Ini, Saatthaan Koottatthaarkal Maunam Ataivaarkal. 4. Pokkishanggal Yaavum Veenum Viruthaavum; Yesu En Kathi Logatthaar Ichsikkum Vaazhvor Kumizhikkum Kaanarkunjjari, Athai Aen Thodaruvaen, Yesuvodataindha Thaazhvu Perithaana Vaazhvu. 5. Logatthin Minukkae, Nee Makaa Azhukkae. Ennaivittup Po; Paavanggalutaiya Theezhppae, Nee Maraiya Vaelaiyaam; Itho Ichsaiyae, Thunmaarkkamae, Nee Ellaanj Samoolamaaga Arrup Povaayaaga. 6. Manamae, Nee Aaru, Poorippaagap Paatu. Yesu Saernthaarae; Atthaal Endhap Paatum Thitthippaaga Maarum. Naan Ulakilae Ninthaiyum Nishtooramum Uttharitthum, Yesuthaavae En Makizhchsiyaamae.