பாடல் #7682
இயேசு பாவி நேசர்தாம்
🔤 Yesu Paavi Naesarthaam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இயேசு பாவி நேசர்தாம், வழிதப்பிப்போன யாரும் அவரால் திரும்பலாம், அவரால் எக்கேடும் மாறும். அவரால் ரட்சிப்புண்டாம்; இயேசு பாவி நேசர்தாம். 2. நாம் மகா அபாத்திர்ர், அவர் கிருபை புரிந்தோர், ரட்சிப்போம் என்றாண்டவர் சத்தியமிட்டே மொழிந்தார் அவர் கிருபாசம்; இயேசு பாவி நேசர்தாம். 3. மந்தையில் காணாதது மேய்ப்பன் கவையால் திரும்பும் பாவத்தில் விழுந்தது அவர் கையினால் எழும்பும் கெட்டுப்போக மாட்டோம் நாம்; இயேசு பாவி நேசர்தாம். 4. அழும் பாவகிளையே தம்மண்டைக் கழைக்கிறாரே, வரும் பாவியைத் தாமே தேவப் பிள்ளையாக்குவாரே; அதை நம்பி வரலாம். இயேசு பாவி நேசர்தாம். 5. துக்கப்பட்டென் பாவத்தை அறிவிக்க இங்கே வந்தேன், மீட்பரே, நீர் கிருபை செய்யும் அப்போமீட்பைக்கண்டேன், போயிற்றென் வியாகுலம்; இயேசு பாவி நேசர்தாம், 6. பாவம் சிவப்பாகிலும் பஞ்சைப் போலாம், எக்கறையும் அவர் ரத்தம் கழுவும்; நீதியின் வெள்ளங்கியையும் ஈவார், அது நிச்சயம்; இயேசு பாவி நேசர்தாம். 7. மனச்சாட்சி குத்தினால் பருவம் தீர்ந்ததென்று சொல்வார். மோசே குற்றஞ் சாட்டினால் அவர் பிணை நின்றுகொள்வார். நீங்கிற்றாக்கினை எல்லாம்; இயேசு பாவி நேசர்தாம். 8. இயேசு பாவி நேசர்தாம், அவர் என்னையும் நேசித்தார், நானும் வந்து சேரலாம், எனக்கும் மன்னிப்பளித்தார், சாவிப்போ தாதாயமாம்; இயேசு பாவி நேசர்தாம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yesu Paavi Naesarthaam, Vazhidhappippona Yaarum Avaraal Thirumbalaam, Avaraal Ekkaetum Maarum. Avaraal Ratsippuntaam; Yesu Paavi Naesarthaam. 2. Naam Makaa Apaatthirr, Avar Kirupai Purinthor, Ratsippom Enraandavar Satthiyamittae Mozhinthaar Avar Kirupaasam; Yesu Paavi Naesarthaam. 3. Manthaiyil Kaanaadhathu Maeyppan Kavaiyaal Thirumpum Paavatthil Vizhundhathu Avar Kaiyinaal Ezhumpum Kettuppoga Maattom Naam; Yesu Paavi Naesarthaam. 4. Azhum Paavakilaiyae Thammantaik Kazhaikkiraarae, Varum Paaviyaith Thaamae Thaevap Pillaiyaakkuvaarae; Athai Nampi Varalaam. Yesu Paavi Naesarthaam. 5. Thukkappatten Paavatthai Arivikka Ingkae Vanthaen, Meetparae, Neer Kirupai Seyyum Appomeetpaikkantaen, Poyirren Viyaakulam; Yesu Paavi Naesarthaam, 6. Paavam Sivappaakilum Panjsaip Polaam, Ekkaraiyum Avar Rattham Kazhuvum; Neethiyin Vellangkiyaiyum Eevaar, Athu Nicchayam; Yesu Paavi Naesarthaam. 7. Manachsaatsi Kutthinaal Paruvam Theerndhathenru Solvaar. Mosae Kurtranj Saattinaal Avar Pinai Ninrukolvaar. Neengkirraakkinai Ellaam; Yesu Paavi Naesarthaam. 8. Yesu Paavi Naesarthaam, Avar Ennaiyum Naesitthaar, Naanum Vanthu Saeralaam, Enakkum Mannippalitthaar, Saavippo Thaathaayamaam; Yesu Paavi Naesarthaam.