பாடல் #7679
இயேசு ஸ்வாமியினுடையா
🔤 Yesu Svaamiyinutaiyaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இயேசு ஸ்வாமியினுடைய காயாங்களின் கூட்டிலே சாங்கோபாங்கமாய் மறைய ஓடிவா, என் மனமே; ஆட்டுக்குட்டிபோல் அமர்ந்து, துக்கமின்றிச் சுகமாய் இயேசுவின் மடியில் வந்து இளைப்பாறக் கடவாய். 2. மண்ணுடன் ஒட்டாமல் ஏறு; அவரண்டை வந்திரு; அந்த மெய்ப்பொருளைத்தேடு, அழிவுள்ளதை வெறு. பல பக்தியாயிராமல், இயேசு ஒருவரையே பற்று. அவரையல்லாமல் ரம்மியங் கிடையாதே. 3. அவர் மந்தையின் ஆடாக அவரண்டையில் தரி; லோக வாழ்வை நாடாயாக, கர்த்தர் உனது கதி. மன்பொருள்கள் என்னத்துக்கு நோவுண்டாக்குகின்றன; மெய்ப் பொருளாங் கர்த்தருக்கு உன் இதயத்தைக் கொடு. 4. நீ மகிழ மனமானால். சுவிசேஷத்தைப் படி, இயேசு உன் மகிழ்ச்சியானால் உன் ஆதாயம் மிகுதி அவர் மாசில்லாத அந்தம், பரிபூரணம். எல்லாம்; செல்வம், மகிமை, ஆனந்தம், யாவும் அவரில் உண்டாகும், 5. லோக நேசத்தை எண்ணாதே, இயேசு நற்சிநேகிதர். மண்ணாம் ஆஸ்தியை நாடாதே. மாளப்பொக்கிஷம் அவர்; தம்முடயவர்களுக்கு இங்கே தேவையானதைத் தருவார், நீ அவருக்கு உன் இதயத்தைப் படை.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yesu Svaamiyinutaiya Kaayaanggalin Koottilae Saangkopaanggamaay Maraiya Otivaa, En Manamae; Aattukkuttipol Amarnthu, Thukkaminrich Sugamaay Yesuvin Matiyil Vanthu Ilaippaarak Katavaay. 2. Mannudan Ottaamal Aeru; Avarantai Vanthiru; Andha Meypporulaitthaetu, Azhivullathai Veru. Pala Pakthiyaayiraamal, Yesu Oruvaraiyae Parru. Avaraiyallaamal Rammiyang Kitaiyaathae. 3. Avar Manthaiyin Aataaga Avarantaiyil Thari; Loga Vaazhvai Naataayaaga, Kartthar Unathu Kathi. Manporulkal Ennatthukku Novuntaakkukindrana; Meyp Porulaang Karttharukku Un Idhayatthaik Kotu. 4. Nee Makizha Manamaanaal. Suvisaeshatthaip Pati, Yesu Un Makizhchsiyaanaal Un Aathaayam Mikuthi Avar Maasillaadha Andham, Paripooranam. Ellaam; Selvam, Makimai, Aanandham, Yaavum Avaril Untaakum, 5. Loga Naesatthai Ennaathae, Yesu Narsinaekidhar. Mannaam Aasthiyai Naataathae. Maalappokkisham Avar; Thammudayavarkalukku Ingkae Thaevaiyaanathaith Tharuvaar, Nee Avarukku Un Idhayatthaip Patai.