பாடல் #7654
ஆகதவனின் சாவை நாம்
🔤 Aagathavanin Saavai Naam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆகாதவனின் சாவை நாம் விரும்போம், அவன் பாவமா வழியை விட்டு நம்மண்டை மனந்திரும்பி வாழ்வதை விரும்புவோம் என்றாண்டவர் மா ஆணையோடே சொன்னவர். 2. மனிதனே, இவ்வார்த்தையை உன் மனத்தாபத்தில் நினை; அமிழாதே, இங்குனக்கே நல்லாறுதல் கிடைக்குமே; நொறுங்குண்டோரை ஸ்வாமி யார் அன்பாகப்பார்ப்போம் என்கிறார். 3. ஆனாலும் உன் நினைவிலே நீ நிர்விசாரனாகாதே; நெடுநாள் இருக்கின்றது, நான் இங்கே நன்றாய்ப் பூரித்து இருந்தும், கடைசியிலே மன்னிப்படைவேன் என்காதே. 4. மெய்தான், கர்த்தாவின் தயவு பெரியதாக உள்ளது; இதோ, விசாரமின்றியே அந்த நினைவின்பேரிலே பொல்லாப்புச் செய்யும் மனிதன் கோபாக்கினைக் குள்ளானவன். 5. சுதனுக்காகத் தயவு நாம் செய்வோம் என்றோர் உன்க்கு; “நீ சாவாய் உயிருடனே இருப்பாய்” என்றதில்லையே; நீ சாவாய் என்ற்றிகிறாய், எப்போதோ என்றறிந்திராய். 6. இப்போ குணப்படு; இப்போ, ஆங்காலம்; நாளை என்னவோ; இப்போ சுகித்தோரில் சிலர் ஓர் வாரம் போனால் போனவர்; ஐயோ குணப்படாதோனாய் நீ செத்தால், வாதைக்குள்ளாவாய். 7. ஆ, இயேசு ஸ்வாமி, மரணம் அணுகுமுன்னே சீக்கிரம் நான் உம்மண்டைக்குச் சேரநீர் சகாயம் பண்ணக்கடவீர்; நான் சாவுக்கின்றும் என்றைக்கும், ஆயத்தமாயிருக்கவும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aakaadhavanin Saavai Naam Virumpom, Avan Paavamaa Vazhiyai Vittu Nammantai Mananthirumpi Vaazhvathai Virumpuvom Enraandavar Maa Aanaiyotae Sonnavar. 2. Manidhanae, Ivvaartthaiyai Un Manatthaabatthil Ninai; Amizhaathae, Ingkunakkae Nallaarudhal Kitaikkumae; Norungkuntorai Svaami Yaar Anpaagappaarppom Enkiraar. 3. Aanaalum Un Ninaivilae Nee Nirvisaaranaakaathae; Netunaal Irukkindrathu, Naan Ingkae Nanraayp Pooritthu Irunthum, Kataisiyilae Mannippataivaen Enkaathae. 4. Meythaan, Kartthaavin Thayavu Periyathaaga Ullathu; Itho, Visaaraminriyae Andha Ninaivinpaerilae Pollaappuch Seyyum Manidhan Kopaakkinaik Kullaanavan. 5. Sudhanukkaagath Thayavu Naam Seyvom Enror Unkku; “nee Saavaay Uyirudanae Iruppaay” Endrathillaiyae; Nee Saavaay Enrrikiraay, Eppotho Endrarinthiraay. 6. Ippo Kunappatu; Ippo, Aangkaalam; Naalai Ennavo; Ippo Sukitthoril Silar Or Vaaram Ponaal Ponavar; Aiyo Kunappataathonaay Nee Setthaal, Vaathaikkullaavaay. 7. Aa, Yesu Svaami, Maranam Anukumunnae Seekkiram Naan Ummantaikkuch Saeraneer Sakaayam Pannakkataveer; Naan Saavukkinrum Enraikkum, Aayatthamaayirukkavum.