பாடல் #7652
ஆ வானம் பூமி யாவையும்
🔤 Aa Vaanam Poomi Yaavaiyum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆ, வானம் பூமி யாவையும் அமைத்து ஆளும் கர்த்தரே, உமது ஞானம் சத்தியம் அளவில் அடங்காததே. 2. உமக்கு வானம் ஆசனம், பூதலம் பாதப்படியாம்; எங்களுக்கு இருப்பிடம் கிடைத்தது மா தயையாம். 3. இவ்வீட்டில் நாங்கள் வசித்து, பக்தியோ டும்மைப் போற்றுவோம்; இடைவிடாமல் துதித்து, கொண்டாடித் தாழ்ந்து சேவிப்போம். 4. இங்கே இருக்கும் நாள்மட்டும் உற்சாகத்தோடு உமக்கே அடங்கி நாங்கள் நடக்கும் குணத்தைத் தாரும் கர்த்தரே. 5. ஜீவன் பிரியும் நேரத்தில் உம்மண்டை உந்து சேரவும், முடிவில்லாத இன்பத்தில் நற் பங்கடையவும் செய்யும். 6. இகத்திலும் பரத்திலும் செங்கோல் செலுத்தும் நாதரே, உமக்கு நித்திய காலமும் துதி உண்டாவதாகவே!.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aa, Vaanam Poomi Yaavaiyum Amaitthu Aalum Karttharae, Umathu Njaanam Satthiyam Alavil Adangkaadhathae. 2. Umakku Vaanam Aasanam, Poodhalam Paadhappatiyaam; Enggalukku Iruppidam Kitaitthathu Maa Thayaiyaam. 3. Ivveettil Naanggal Vasitthu, Pakthiyo Tummaip Porruvom; Itaivitaamal Thuthitthu, Kontaatith Thaazhnthu Saevippom. 4. Ingkae Irukkum Naalmattum Ursaagatthotu Umakkae Adangki Naanggal Natakkum Kunatthaith Thaarum Karttharae. 5. Jeevan Piriyum Naeratthil Ummantai Unthu Saeravum, Mutivillaadha Inbatthil Nar Panggataiyavum Seyyum. 6. Igatthilum Paratthilum Sengkol Selutthum Naadharae, Umakku Nitthiya Kaalamum Thuthi Untaavathaagavae!.