பாடல் #7591
ஆயிரக்கணக்கான
🔤 Aayirakkanakkaana
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயிரக்கணக்கான வருடங்களாய் -எம் ஆண்டவரே உம்மை எதிர் பார்த்தோம் இஸ்ராயேல் ஜனங்களை ஆளவரும் - எம் இயேசு இரட்சகரே எழுந்தருளும். ஓசானா தாவீதின் புதல்வா ஓசானா ஓசானா ஓசானா மாமரி வயிற்றினில் பிறந்தவரே - மா முனிசூசைக் கரங்களில் வளர்ந்தவரே மானிடர் குலத்தினில் உதித்தவரே - எம் மன்னவரே எழுந்தருள்வீரே அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் - மா அருள் தாபோதனரால் புகழப்பட்டீர் ஆகாயங்களை நீர் திறக்க விட்டீர் - உம் ஆதி பிதாவிடம் பதவி பெற்றீர் தாவீது அரசரின் புத்திரரே - ஓர் தெய்வீக முடியோடு வந்தவரே தருமரெனப் புகழ் அடைந்தவரே - எம் தேவனே தேவனே வருவீரே கானான் மணத்தினில் அழைக்கப்பட்டீர் - நீர் கலங்கினவர்கள் பேரில் இரக்கப்பட்டீர் கொண்டுவரச் சொன்னீர் சுத்த தண்ணீர் - அதை சுத்த ரசமாக்கிப் பெயரடைந்தீர் புவியினில் புரிந்தீர் புண்ணியங்கள் - எம் புத்தியில் புகுத்தினீர் அருள் மொழிகள் பக்தியில் சேர்த்தீர் பல சீடர்கள் - மா பவனியோடு வாரீர் படைத்தவரே குருடர்கள் அனேகர் ஒளி பெற்றார் - முடம் கூன் செவிடர் பலர் சுகம் பெற்றார் குஷ்டர் அதிகமே நலம் பெற்றார் - எம் கடவுளே எம்மோடே வாரும் நீரே மரித்தவர்கள் பலர் உயிர் பெற்றார் - ஒரு மனமுடைந்த விதவை மகன் அடைந்தார் மரிமதலேன் சகோதரன் பெற்றொர் - எம் மனுக்குலம் இரட்சிக்க வந்தவரே யூதேயா நாட்டினில் புகழப் பெற்றீர் - எம் யூதர் ராஜனென்று முடிபெற்றீர் யெருசலேம் நகர் தனில் களிப்புற்றீர் - எம் இயேசு அரசனே அரசாள்வீர் பாவிகளைகத் தேடி வந்தவரே - எம் பாவங்கள் போக்க வல்லவரே பாடுகள் பட்டு உழைத்தவரே - எம் பராபரனே உட்செல்வீரே கோவேறு குட்டியை ஆசனமாய் - எம் குழந்தைகள் துணியே பஞ்சணையாய் கிளைகளே உமது ஜெயக் கொடியாய் - எம் கர்த்தரே சீக்கிரம் நடப்பீரே உலகமே உமது அரிய வேலை - எம் உயிருமே உமது மா புதுமை உலகத்தை ஆண்டு வருபவரே - எம் உலகரசே உள்ளே புகுவீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayirakkanakkaana Varudanggalaay -em Aandavarae Ummai Ethir Paartthom Israayael Jananggalai Aalavarum - Em Yesu Iratsakarae Ezhundharulum. Osaanaa Thaaveethin Pudhalvaa Osaanaa Osaanaa Osaanaa Maamari Vayirrinil Pirandhavarae - Maa Munisoosaik Karanggalil Valarndhavarae Maanidar Kulatthinil Uthitthavarae - Em Mannavarae Ezhundharulveerae Arpudha Yorthaanil Theetsai Perreer - Maa Arul Thaapodhanaraal Pugazhappatteer Aakaayanggalai Neer Thirakka Vitteer - Um Aathi Pithaavidam Pathavi Perreer Thaaveethu Arasarin Putthirarae - Or Theyveega Mutiyotu Vandhavarae Tharumarenap Pugazh Ataindhavarae - Em Devanae Devanae Varuveerae Kaanaan Manatthinil Azhaikkappatteer - Neer Kalangkinavarkal Paeril Irakkappatteer Kontuvarach Sonneer Suttha Thanneer - Athai Suttha Rasamaakkip Peyarataintheer Puviyinil Purintheer Punniyanggal - Em Putthiyil Pukutthineer Arul Mozhigal Pakthiyil Saerttheer Pala Seedarkal - Maa Pavaniyotu Vaareer Pataitthavarae Kurudarkal Anaegar Oli Perraar - Mudam Koon Sevidar Palar Sugam Perraar Kushtar Athigamae Nalam Perraar - Em Katavulae Emmotae Vaarum Neerae Maritthavarkal Palar Uyir Perraar - Oru Manamutaindha Vidhavai Makan Atainthaar Marimathalaen Sakodharan Perror - Em Manukkulam Iratsikka Vandhavarae Yoothaeyaa Naattinil Pugazhap Perreer - Em Yoodhar Raajanenru Mutiperreer Yerusalaem Nakar Thanil Kalippurreer - Em Yesu Arasanae Arasaalveer Paavigalaigath Thaeti Vandhavarae - Em Paavanggal Pokka Vallavarae Paatugal Pattu Uzhaitthavarae - Em Paraabaranae Utselveerae Kovaeru Kuttiyai Aasanamaay - Em Kuzhanthaigal Thuniyae Panjjanaiyaay Kilaigalae Umathu Jeyak Kotiyaay - Em Karttharae Seekkiram Natappeerae Ulakamae Umathu Ariya Vaelai - Em Uyirumae Umathu Maa Puthumai Ulakatthai Aantu Varubavarae - Em Ulakarasae Ullae Pukuveerae